ETV Bharat / state

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியவா்களை மீட்கும் கருவி - கண்டுபிடித்த எலெக்ட்ரிசியன்

author img

By

Published : Feb 11, 2020, 11:53 PM IST

Bore well invenction
Bore well invenction

அரியலூர்: ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியவா்களை மீட்கும் கருவியை அரியலூர் மாவட்ட எலெக்ட்ரிசியன் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

ஆழ்துளைக் கிணற்றில் சிறுவா்கள் சிக்கிக் கொண்டால், அவா்களை மீட்பதற்கு 'ஏர் லாக்' கருவியை, அரியலூர் அருகே உள்ள கீழ மாத்தூா் கிராமத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிசியன் வெங்கடாசலம் கண்டுபிடித்துள்ளார்.

ஐந்து ஆயிரம் மதிப்பீட்டில் கண்டுபிடித்துள்ள, இந்தக் கருவி ஏர் லாக் சிஸ்டம் முறையில் செயல்படும். இது ஐந்து அங்குல அளவில், தலையைப் பிடித்து தூக்கும் திறன் உடையது. இதில் கேமரா பொருத்திக் கொள்ளலாம் எனவும் வெங்கடாசலம் தெரிவித்தார். மணப்பாறையில் குழந்தை சுஜித் கிணற்றில் சிக்கி, இறந்த சம்பவத்தால் இது போன்ற கருவி கண்டுபிடித்துள்ளேன் என அவர் கூறினார்.

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியவா்களை மீட்கும் கருவி

இதையும் படிங்க: பேராசிரியர்கள் கண்டித்ததால் தற்கொலைக்கு முயற்சித்த மாணவன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.