ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 8ஆம் நாள்: களமாடும் முக்கிய இந்திய வீரர்கள்

author img

By

Published : Jul 29, 2021, 11:53 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் 8ஆம் நாள்
டோக்கியோ ஒலிம்பிக் 8ஆம் நாள்

ஒலிம்பிக் தொடரின் எட்டாவது நாளான ஜூலை 30இல் இந்தியா சார்பில் பங்கேற்கும் முக்கிய வீரர்கள் குறித்த தொகுப்பு.

டோக்கியோ: ஒலிம்பிக்கின் எட்டாம் நாளான ஜூலை 30 முதல் தடகளப் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இதில் ஸ்டீல்பிள்சேஸ், தடை ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் இந்தியா பங்கேற்கிறது. மேலும், பிற விளையாட்டுகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முக்கிய வீரர்கள், வீராங்கனைகள் குறித்த இங்கு காணலாம்

தீபிகா குமாரி - வில்வித்தை

வில்வித்தையில் தனிநபர் பிரிவில் தற்போது புயலாக விளையாடிக்கொண்டிருக்கிறார் தீபிகா. நேற்று (ஜூலை 28) ரவுண்ட் ஆஃப் 32, 16 என இரண்டு போட்டிகளை வென்று ரவுண்ட் ஆஃப் 8-க்கு தகுதிப்பெற்றார். தீபிகா நாளைய போட்டியில் ரஷ்யாவின் க்சேனியா பெரோவா-ஐ சந்திக்கிறார். நாளையே பதக்கத்திற்கான போட்டி இருப்பதால் தீபிகா மேல் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பி.வி.சிந்து - பேட்மிண்டன்

பேட்மிண்டனில் இந்தியாவிற்கு தங்கம் வாங்கி தந்தே ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் சிந்து. உலகின் ஏழாம் நிலை வீரரான ஜப்பான் வீராங்கனை யமகுச்சி உடன் பி.வி. சிந்து நாளை மோத இருக்கிறார்.

லவ்லினா, சிம்ரன்ஜித் கவுர் - குத்துச்சண்டை

குத்துச்சண்டையில் இந்தியாவிற்குப் பதக்கம் பெற்றுத்தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேரி கோம் இன்று (ஜூலை 29) தோல்வியடைந்த நிலையில், லவ்லினாவும், சிம்ரன்ஜித் கவுரும்தான் தற்போதைய நம்பிக்கையாக உள்ளனர். லவ்லினா லைட்வெயிட் பிரிவில் காலிறுதியிலும், சிம்ரன்ஜித் கவுர் வெல்டர்வெயிட் பிரிவில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றிலும் பங்கேற்கின்றனர்.

ஆண்கள் ஹாக்கி அணி

இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வென்று காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிப்பெற்றுள்ள இந்திய அணி, நாளை குரூப் பிரிவில் உள்ள ஜப்பான் அணியுடன் மோதுகிறது.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 8ஆவது நாள்: இந்தியா பங்கேற்கும் போட்டி அட்டவணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.