ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக்: தொடர்கிறது பதக்க தாகம்; அடுத்த சுற்றுக்கு முன்னேறுவாரா சிந்து!

author img

By

Published : Jul 27, 2021, 10:52 PM IST

ஒலிம்பிக் தொடரின் ஆறாவது நாளான நாளை (ஜூலை 28) இந்தியா சார்பில் பங்கேற்கும் முக்கிய வீரர்கள் குறித்த தொகுப்பு.

டோக்கியோ ஒலிம்பிக்
டோக்கியோ ஒலிம்பிக்

டோக்கியோ: இந்தியாவுக்கு அடுத்த பதக்கத்தை பெற்றுத்தர இருப்பது யார் என்ற கேள்விக்கு இன்றும் (ஜூலை 27) விடை கிடைக்கவில்லை. துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வெல்லும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, தகுதிச்சுற்றோடு திரும்பியுள்ளது. பேட்மிண்டனில் வீராங்கனை பி.வி.சிந்து, பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத், வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஆகியோர் பங்கேற்கும் போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பி.வி.சிந்து - பேட்மிண்டன்

மகளிர் ஒற்றையர் பிரிவின் உலகின் தலைசிறந்த வீரரான பி.வி. சிந்து, நாளை ஹாங் காங் வீராங்கனையுடன் மோதுகிறார். நாளைய போட்டியில் வெல்வது மூலம், சிந்து நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவார்.

அர்ஜுன் லால் & அரவிந்த் சிங் - துடுப்பு படகுப்போட்டி

துடுப்பு படகுப்போட்டியில் அர்ஜுன், அரவிந்த் இணை அரையிறுதிக்கு முன்னேறியது பெரும் ஆறுதலாய் அமைந்தது. நாளைய போட்டியிலும் வெல்லும்பட்சத்தில் இறுதிப்போட்டிக்குச் சென்று பதக்கம் வெல்ல வாய்ப்பை பெறும்.

தீபிகா குமாரி - வில்வித்தை

வில்வித்தையில் இந்தியாவிற்கு தீபிகா குமாரி பெரும் நம்பிக்கையாக விளங்குகிறார். வில்வித்தை ரவுண்ட் ஆஃப் 32-இல் பங்கேற்கும் தீபிகா இந்த சுற்றை கடந்து ரவுண்ட் ஆஃப் 16-க்கு செல்வார் எஎன்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூஜா ராணி - குத்துச்சண்டை

மிடில்வெயிட் எடைப்பிரிவில் (69-75 கிலோ) இந்தியா சார்பாக பங்கேற்கும் பூஜா, ரவுண்ட் ஆஃப் 16-இல் அல்ஜிரியன் வீராங்கனையை சந்திக்கிறார். இவர் இந்தியாவுக்கு பதக்கம் வாங்கித்தர அதிகம் வாய்ப்புள்ள வீராங்கனையாக பார்க்கப்படுகிறார்.

பி சாய் பிரனீத் - பேட்மிண்டன்

இந்த ஒலிம்பிக் தொடருக்கு முன்பு வரை வெல்வதற்கு கடினமான வீரராக பார்க்கப்பட்ட சாய் பிரனீத், ஒலிம்பிக்கின் முதல் போட்டியிலேயே தோல்வியுற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், அவரின் நாளைய ஆட்டம் அனைவராலும் கவனிக்கப்படக் கூடியதாக இருக்கிறது. வரும் போட்டிகளை நேர் செட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே அவர் நாக்-அவுட் சுற்றுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 6ஆவது நாள்: இந்தியா பங்கேற்கும் போட்டி அட்டவணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.