Tokyo Olympics 16ஆவது நாள்: இந்தியாவிற்கான முக்கிய போட்டிகள்!

author img

By

Published : Aug 6, 2021, 10:40 PM IST

Tokyo Olympics 16ஆவது நாள்
Tokyo Olympics 16ஆவது நாள் ()

ஒலிம்பிக் தொடரின் 16ஆம் நாளான ஆக.7ஆம் தேதி இந்திய வீரர்கள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள் குறித்த தொகுப்பு இதோ...

டோக்கியோ: இந்தியாவின் முக்கிய போட்டிகளான நீரஜ் சோப்ரா பங்கேற்கும் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டி, அதிதி அசோர் பங்கேற்கும் கோல்ஃப் இறுதிச்சுற்று போட்டி, பஜ்ரங் புனியா பங்கேற்கும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி, ஆகியவை ஒலிம்பிக் தொடரின் 16ஆவது நாளான ஆக.7ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

நீரஜ் சோப்ரா - ஈட்டி எறிதல்

நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் 86.59மீ தூரத்திற்கு எறிந்து அசத்தலாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தார் தடகளத்தில் இந்தியாவுற்கான பதக்கம் எனும் ஒரு நூற்றாண்டு கனவை சுமந்து நாளைய இறுதிப்போட்டியைச் சந்திக்கிறார், 23 வயதேயான நீரஜ் சோப்ரா.

அதிதி அசோக் - கோல்ஃப்

நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவின் மற்றொரு மேஜிக் கிஃப்ட் அதிதி அசோக். கோல்ஃப் போட்டியில் மூன்று சுற்றுகளை கடந்து தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நெல்லி கோர்டாவை விட மூன்று ஷாட்களே பின்தங்கியுள்ளார். நாளைய இறுதிச்சுற்றுப் போட்டியில் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் முதல் ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெறுவார் என்பது குறிப்பிடதக்கது.

பஜ்ரங் புனியா - மல்யுத்தம்

மல்யுத்தம் 65கிலோ எடைப்பிரிவில் இன்று அரையிறுதி வரை முன்னேறிய பஜ்ரங் புனியா, அரையிறுதியில் அஸர்பைஜன் நாட்டு வீரரிடம் தோல்வியைடந்தார். இதனையடுத்து, நாளை நடைபெறவுள்ள வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பஜ்ரங் புனியா பங்கேற்க உள்ளார்.

இதையும் படிங்க: Tokyo Olympics: தீபக் புனியா பயிற்சியாளரின் அங்கீகாரம் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.