பி.வி. சிந்துவிற்கு குவியும் பாராட்டுகள்; ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!

author img

By

Published : Aug 1, 2021, 9:08 PM IST

Congratulations to Sindhu

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதை அடுத்து, அவருக்கு இந்திய குடியரசு தலைவர், பிரதமர் உள்பட பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி: இந்தியாவிற்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் இரண்டாவது பதக்கத்தை பி.வி.சிந்து இன்று (ஆக்.1) பெற்றுக்கொடுத்துள்ளார். இந்நிலையில், அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி உள்பட பல அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

  • P V Sindhu becomes the first Indian woman to win medals in two Olympic games. She has set a new yardstick of consistency, dedication and excellence. My heartiest congratulations to her for bringing glory to India.

    — President of India (@rashtrapatibhvn) August 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

"இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் பிவி சிந்து ஆவார். அவர் அர்ப்பணிப்புக்கும், சிறப்பான ஆட்டத்துக்கும் புதிய அளவுகோலை அமைத்துள்ளார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து

உங்களின் விளையாட்டை கண்டு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தோம். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதற்கு வாழ்த்துக்கள். சிந்து இந்தியாவின் பெருமை மற்றும் இந்திய ஒலிம்பிக் வீரர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட்

  • Well played @Pvsindhu1.

    Time and again you have proved your unparalleled commitment and devotion towards the game. May you continue to bring glory to the nation.

    We are proud of your remarkable accomplishment. pic.twitter.com/uiGNLwwMVO

    — Amit Shah (@AmitShah) August 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பிவி சிந்து நன்றாக விளையாடினார். விளையாட்டின் மீதான உங்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்பையும், ஈடுபாட்டையும் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். நீங்கள் தேசத்திற்கு பெருமை சேர்ப்பீர்கள். உங்கள் குறிப்பிடத்தக்க சாதனைக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

அமைச்சர் பியூஷ் கோயல் ட்வீட்

ஒலிம்பிக் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை தனிநபர் பிரிவில் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் வெண்கலப் பதக்க வெற்றியானது ஒட்டுமொத்த தேசத்துக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது.

  • Fantastic game by India’s Badminton player @Pvsindhu1! Congratulations to her for the Bronze medal in the #Olympics. She has made the country proud on several occasions by achieving remarkable success. Today she has done it again! #TokyoOlympics2020

    — Rajnath Singh (@rajnathsingh) August 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ராகுல் காந்தி

  • Big congratulations to PV Sindhu for winning the second medal for India. #Tokyo2021 #Bronze

    — Rahul Gandhi (@RahulGandhi) August 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

"இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கத்தை வென்று கொடுத்த பிவி சிந்துவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: வென்றார் சிந்து; இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.