இந்தியா திரும்பிய சுமித் ஆன்டில் உள்பட 4 வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

author img

By

Published : Sep 3, 2021, 6:14 PM IST

சுமித் ஆன்டில்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற சுமித் ஆன்டில் உள்பட நான்கு இந்தியா வீரர்கள் இன்று (செப்டம்பர் 3) நாடு திரும்பிய நிலையில், அவர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர்கள் இதுவரை 2 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றுள்ளனர். இதன்மூலம், இந்திய அணி 36ஆவது இடத்தில் தொடர்ந்து நீடித்துவருகிறது.

இன்று மட்டும் இந்தியா இரண்டு பதக்கங்களைப் பெற்றுள்ளது. உயரம் தாண்டுதல் டி-44 பிரிவில் பிரவீன் குமார் வெள்ளியும், துப்பாக்கிச்சுடுதலில் அவனி லெகாரா வெண்கலத்தையும் வென்றனர்.

நாடு திரும்பினார் உலகச் சாதனையாளர்

முன்னதாக, ஈட்டி எறிதல் எஃப்-64 பிரிவில் இந்தியாவின் சுமித் ஆன்டில் தங்கம் வென்றது மட்டுமில்லாமல், கொடுக்கப்பட்ட ஆறு துரோக்களில், மூன்று துரோவில் அடுத்தடுத்து மூன்று உலக சாதனைகளைப் படைத்தார்.

  • श्री @ianuragthakur ने खेल राज्यमंत्री श्री @NisithPramanik जी के साथ #Tokyoparalympics2020 के स्वर्ण पदक विजेता श्री सुमित अंतिल,रजत पदक विजेता श्री देवेंद्र झाझरिया व श्री योगेश कथूरिया एवं कांस्य पदक विजेता श्री शरद कुमार का अभिनंदन किया व उन्हें अपनी शुभकामनाएँ दीं। pic.twitter.com/uT1LijwxlN

    — Office of Mr. Anurag Thakur (@Anurag_Office) September 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், சுமித் ஆன்டில் உள்பட பிற பதக்கம் வென்ற வீரர்களான தேவேந்திர ஜஜாரியா (வெள்ளி), சரத் குமார் (வெண்கலம்), யோகேஷ் கத்துனியா (வெண்கலம்) ஆகியோர் இன்று டோக்கியோவிலிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்பினர்.

உற்சாக வரவேற்பு

இதையடுத்து, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா விளையாட்டு ஆணையம் (SAI) அவர்களுக்கு முறையான வரவேற்பை அளித்தது.

விமான நிலையத்தின் உள்ளே வீரர்கள் தாங்கள் வென்ற பதக்கங்களைக் காண்பித்து புகைப்படங்கள் எடுக்க அனுமதித்தனர். அவர்களை வரவேற்க பல்வேறு ரசிகர்கள் விமான நிலையத்தின் வெளியே காத்துக்கொண்டிருந்தபோது, கரோனா தொற்று தடுப்பு காரணமாக அவர்களைச் சந்திக்க அனுமதியளிக்கவில்லை.

இதையடுத்து, இந்த நான்கு வீரர்களை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது அவர் வீரர்களுடன், அவர்களின் பதக்கங்களைக் காண்பித்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கூகுள்தான் எனது முதல் பயிற்சியாளர் - வெள்ளி வென்ற பிரவீன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.