'கிரிக்கெட் டூ கிராண்ட்ஸ்லாம்' விம்பிள்டனை கைப்பற்றிய ஆஷ்லே பார்ட்டி

author img

By

Published : Jul 11, 2021, 5:12 PM IST

ஆஷ்லே பார்ட்டி

ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி விம்பிள்டன் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்று(ஜூலை 10) நடைபெற்றது.

இதில், உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி செக் குடியரசை சேர்ந்த எட்டாம் நிலை வீராங்கனை கரோலினா பிலிஸ்கோவாவை எதிர்கொண்டார்.

கோப்பையை வென்ற பார்ட்டி

ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என எளிதில் கைப்பற்றிய பார்ட்டி, இரண்டாவது செட்டை 6-7 என டை பிரேக்கர்வரை சென்று தவறவிட்டார். கோப்பை நிர்ணயிக்கும் மூன்றாது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்ட்டி அதை 6-3 என்று கைப்பற்றினார்.

இறுதியில் 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்ற ஆஷ்லே பார்ட்டி, விம்பிள்டன் கோப்பை கைப்பற்றினார். இதன்மூலம், பார்ட்டி இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். 2019ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஒபன் இவரின் முதல் கிராண்ட்ஸ்லாம் ஆகும்.

கிரிக்கெட் டூ டென்னிஸ்

ஐந்து வயதிலிருந்து டென்னிஸ் விளையாடிவரும் ஆஷ்லே, ஒரு கிரிக்கெட் வீராங்கணையும்கூட. 2015-16ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக இவர் விளையாடியுள்ளார்.

பின்னர் 2016ஆம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு, டென்னிஸில் முழு கவனம் செலுத்தத் தொடங்கிய ஆஷ்லே ஐந்தே ஆண்டுகளில் முதல் நிலை வீரங்கனையாக உருவெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடரில் மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.