ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன்: காலிறுதியில் மெத்வதேவ்!

author img

By

Published : Feb 15, 2021, 2:09 PM IST

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்றுக்கு ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் முன்னேறியுள்ளார்.

Medvedev storms into Australian Open quarters
Medvedev storms into Australian Open quarters

மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றுப் போட்டிகள் இன்று (பிப். 15) நடந்துவருகின்றன. இதில் உலகின் நான்காம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டை எதிர்கொண்டார்.

பரபரப்பான இப்போட்டியின் தொடக்கத்திலிருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டையும், 6-2 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி மெக்டொனால்டிற்கு அதிர்ச்சியளித்தார்.

டேனில் மெத்வதேவ்

அதன்பின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாம் செட் ஆட்டத்திலும் அசத்திய மெத்வதேவ் 6-3 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றினார். இதன்மூலம் டேனில் மெத்வதேவ் 6-4, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் மெக்டொனால்டை வீழ்த்தி, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க: ஹர்பஜன் சாதனையை முறியடித்த அஸ்வின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.