T20 WORLDCUP: இந்தியா பேட்டிங்; அணியில் இஷான், ஷர்துல்

author img

By

Published : Oct 31, 2021, 7:30 PM IST

T20 WORLDCUP, IND VS NZ

டி20 உலகக்கோப்பை தொடரின் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

துபாய்: ஐசிசி் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் ஓமன், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில் இன்று (அக். 31) நடைபெறும் போட்டியில் இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இரு மாற்றங்கள்

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் செய்ஃபர்ட் ஓய்வளிக்கப்பட்டு ஆடம் மில்னே சேர்க்கப்பட்டுள்ளார்.

பிளேயிங் XI

இந்தியா: ரோஹித் சர்மா, இஷான் கிஷன், கே.எல். ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி

நியூசிலாந்து: மார்டின் குப்தில், டைரில் மிட்செல், கேன் வில்லியம்சன், டேவோன் கான்வே, கிளேன் பிளிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், ஆடம் மில்னே, இஷ் சோதி, டிம் சௌதி, டிரன்ட் பவுல்ட்

இதையும் படிங்க: DO OR DIE: நீண்டநாள் பகையை தீர்க்குமா? இந்தியா; நியூசிலாந்து அணிகள் மோதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.