ETV Bharat / sports

ஒலிம்பிக்கிற்கான ஆலோசகரை நியமிக்க ஒரு கோடி செலவு செய்ய இந்தியா தயார்!

author img

By

Published : Jul 9, 2020, 3:16 AM IST

ஒரு கோடி ரூபாய் சம்பளத்துடன் 2024, 2028 ஒலிம்பிக்கிற்கான உயர்திறன் ஆலோசகரை நியமிக்க இந்திய விளையாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.

SAI keen to spend Rs 1 crore to hire consultant for 2024 & 2028 Olympics
SAI keen to spend Rs 1 crore to hire consultant for 2024 & 2028 Olympics

இந்திய விளையாட்டு ஆணையம் கூடுதலாக நான்கு மூத்த ஆராய்ச்சி அலுவலர்கள், ஐந்து ஆராய்ச்சி அலுவலர்கள், ஐந்து தடகள அலுவலர்கள் ஆகியோரை பணியில் எடுக்கவும் முடிவு செய்துள்ளது.

தடகள அலுவலர்கள், ஆராய்ச்சி அலுவலர்களுக்கு மாதம் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், மூத்த ஆராய்ச்சி அலுவலர்களுக்கு மாதம் ரூ.80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையும், உயர்திறன் ஆலோசகருக்கு மாதம் ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி வரையும் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்திறன் ஆலோசகர் நியமிக்கப்பட்டால் இந்திய விளையாட்டு ஆணையத்தில் அதிக சம்பளம் வாங்கும் நபராக இருப்பார் என கூறப்படுகிறது.

2024 ஒலிம்பிக் போட்டி பாரிஸிலும், 2028இல் லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெற உள்ளது. இதில் இந்தியா சிறப்பாக செயல்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார்.

அதிலும் குறிப்பாக 2028 ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியலில் இந்தியா முதல் 10 இடத்தில் இடம்பெறும் என்றும் அதற்கான பணிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார்.

அதன் ஒருபகுதியாக இந்திய விளையாட்டு ஆணையம் மேற் கூறப்பட்ட அலுவலர்களை தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கிரிக்கெட்டர் முதல் பிசிசிஐ தலைவர் வரை தாதா கடந்து வந்த பாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.