ETV Bharat / sports

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி... கார்ல்செனுக்கு நெருக்கடி கொடுக்கும் பிரக்ஞானந்தா... 2வது சுற்றில் மோதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 11:12 AM IST

FIDE World Chess Championship: உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள மாக்னஸ் கார்ல்செனும், தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தாவும் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

Magnus Carlsen - Praggnanandhaa
மாக்னஸ் கார்ல்சென்னை - பிரக்ஞானந்தா

பாகு: அஜர்பைஜானின் பாகு நகரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள ஃபேபியானோ கருவானாவை எதிர்கொண்டார். இந்த போட்டியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த பிரக்ஞானந்தா டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

21 ஆண்டுகளுக்கு பிறகு உலககோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பிரக்ஞானந்தா. அதுமட்டுமின்றி இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற மிக குறைந்த வயதுடையவர் என்ற பெருமையையும் படைத்து உள்ளார். இறுதி போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடத்திலும், 5 முறை சாம்பியான மாக்னஸ் கார்ல்சென்னை, பிரக்ஞானந்தா எதிர்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: Ind Vs Ire 3rd T20 : இறுதி ஆட்டத்திலும் வெல்லும் முனைப்புடன் இந்தியா! அயர்லாந்து தாக்குபிடிக்குமா?

இந்த போட்டியின் முதல் சுற்று நேற்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். இறுதி போட்டி என்பதால் இருவரும் நிதானமாக யோசித்து ஒவ்வொறு நகர்வையும் நகர்த்தி விளையாடி வந்தனர். இந்த போட்டியானது மாலை 4.30 மணிக்கு தொடங்கி சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் சென்று நிறைவடைந்தது. 35வது நகர்வில் ஆட்டம் டிரா ஆனது.

முதல் சுற்றில் இருவரும் சமன் செய்ததால், இதன் இரண்டாவது ஆட்டம் இன்று (ஆகஸ்ட் 23) மாலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அட்டத்தில் வெற்றி பெறுபவர்கள் சாம்பியன் பட்டத்தை பெறுவார்கள். ஒரு வேளை 2வது சுற்றும் சமன் செய்யப்பட்டால், ஆட்டமானது டை பிரேக்கருக்கு செல்லும் என கூறப்பட்டு உள்ளது. டை பிரேக்கர் ஆட்டம் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: டி.என் சாம்பியன்ஸ் சார்பில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.