ETV Bharat / bharat

Ind Vs Ire 3rd T20 : இறுதி ஆட்டத்திலும் வெல்லும் முனைப்புடன் இந்தியா! அயர்லாந்து தாக்குபிடிக்குமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 6:42 AM IST

Ind Vs Ire T20 : அயர்லாந்து - இந்தியா அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

Cricket
Cricket

டப்ளின் : இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, டப்ளின் நகரில் இன்று (ஆகஸ்ட். 23) நடைபெறுகிறது.

அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் ட்க்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 20ஆம் தேதி அதே டப்ளின் மைதானத்தில் நடைபெற்றது. அந்த ஆட்டத்திலும் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வென்று தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (ஆகஸ்ட். 23) அதே டப்ளின் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா தலைமையில் திறம்பட செயல்பட்டு வருகிறது. தொடக்க வீரர்கள் யாஷ்ஸவி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் நன்றாக செயல்பட்டு வருகிண்றனர்.

நடுக்கள வீரர் திலக் வர்மாவின் ஆட்டம் மற்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. கடந்த இரண்டு ஆட்டங்களிலும் பெரிய அளவில் அவர் சோபிக்கவில்லை. பந்துவீச்சை பொறுத்தவரை அயர்லாந்து மண்ணில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா. ரவி பிஷ்னாய், பிரஷீத் கிருஷ்ணா உள்ளிட்டோர் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். அவ்வப்போது சுழற்பந்து வீச்சாளர்களும் அயர்லாந்து வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்த ஆட்டத்துடன் தொடர் முடிய உள்ளதால் இதுவரை களமிறங்காத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 📸 📸 One of India's finest glovemen, Mr. Kiran More, is at NCA, Bangalore to conduct a high performance camp for wicket-keepers.

    8 men and 4 women wicket-keepers have the opportunity to learn the tricks of this trade first hand from someone who made wicket-keeping a joy to… pic.twitter.com/8qC17LBF09

    — BCCI (@BCCI) August 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேநேரம் அயர்லாந்து அணியும் கத்துக் குட்டி என்கிற சொற்றொடருக்கு எதிர்த்தார் போல் விளையாடி வருகிறது. இந்திய வீரர்களுக்கு கடும் சவால்களை அளித்து வருகின்றனர். பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி, கடைசி ஆட்டத்தை கைப்பற்றி ஆறுதல் வெற்றி பெற துடிக்கும்.

அதேநேரம் இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றி, அயர்லாந்து அணியை ஒயிட் வாஷ் செய்ய இந்திய வீரர்கள் முயற்சிப்பார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

இதையும் படிங்க : Praggnanandhaa in FIDE World Cup 2023: டிராவில் முடிந்த முதல் சுற்று!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.