ETV Bharat / sports

ISL 2022 Final: முதல் முறையாக கோப்பையை வென்ற ஹைதராபாத்!

author img

By

Published : Mar 21, 2022, 11:48 AM IST

ISL 2022 Final
ISL 2022 Final

விறுவிறுப்பாக நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து இறுதி போட்டியில் (ISL 2022 Final) ஹைதராபாத்திடம் கேரளம் வீழ்ந்தது. இந்தப் போட்டியில் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் கேரளத்தை வீழ்த்திய ஹைதராபாத் முதல் முறையாக கோப்பையை தனதாக்கியது.

கோவா : இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் கேரள பிளாஸ்டர்ஸ் (Kerala Blasters) அணி ஹைதராபாத் அணியிடம் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்ந்தது.

இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இந்நிலையில் ஆட்டத்தின் 68ஆவது நிமிடத்தில் கேரளமும், 88ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் வீரரும் ஒரு கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் 1-1 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலையில் இருந்தது.

ISL 2022 Final: Hyderabad beat Kerala Blasters, clinch maiden title with 3-1 win on penalties
கோல்டன் ஷூ விருதுடன் பார்ட் ஓக்பெச்சே (Bart Ogbeche) ஹைதராபாத்.

இதையடுத்து கூடுதலாக 30 நிமிடங்கள் ஆட்டத்துக்கு அளிக்கப்பட்டது. அப்போதும் யாரும் கோல் அடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து பெனால்டி ஷூட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் ஹைதராபாத் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் கேரளத்தை தோற்கடித்தது. இந்தத் தொடரில் 18 கோல்கள் அடித்த ஹைதராபாத் வீரர் ஒக்பெச்சேவுக்கு தங்க ஷூ வழங்கப்பட்டது.

ISL 2022 Final: Hyderabad beat Kerala Blasters, clinch maiden title with 3-1 win on penalties
தங்க கையுறை (கோல்டன் க்ளவுஸ்) விருது பெற்ற கேரளத்தின் கோல்கீப்பர் சுகன் கில்.

முன்னதாக அரையிறுதி ஆட்டத்தில் அரையிறுதியில், ஹைதராபாத் அணி 3-2 என்ற கணக்கில் ATK மோகுன் பாகனை (ATK Mohun Bagan) தோற்கடித்தது.

கேரளம், ஜாம்ஷெட்பூரை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : களத்தில் நிலைகுலைந்த வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை; என்ன ஆச்சு அவருக்கு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.