ETV Bharat / sports

காமன்வெல்த் 2022: பளு தூக்குதலில் பதக்கங்களை அள்ளிய இந்தியா - பதக்கப்பட்டியலில் எத்தனையாவது இடம்?

author img

By

Published : Jul 31, 2022, 8:40 AM IST

Updated : Jul 31, 2022, 9:16 AM IST

காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது.

காமன்வெல்த் 2022
காமன்வெல்த் 2022

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் 2022 தொடர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நேற்று முன்தினம் (ஜூலை 29) தொடங்கியது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் மொத்தம் 205 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இத்தொடரில், பளு தூக்குதல் போட்டிகள் நேற்று (ஜூலை 31) நடைபெற்றன. பளு தூக்குதல் மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தினார்.

ஒரே நாளில் 4 பதக்கம்: முன்னதாக, பளு தூக்குதல் ஆடவர் 55 கிலோ எடைப்பிரிவில் சங்கேத் சர்கர் வெள்ளியையும், 61 கிலோ எடைப்பிரிவில் குருராஜா பூஜாரி வெண்கலத்தையும் வென்று இந்தியாவை பதக்கப்பட்டியலில் முன்னணி பெற செய்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பளு தூக்குதல் மகளிர் 55 கிலோ எடைப்பிரிவில் பிந்த்யாராணி 202 கிலோ பளுவை தூக்கி (ஸ்னாட்ச் - 86 கி. + கிளீன் & ஜெர்க் 116 கி.) வெள்ளி வென்று இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை பெற்று தந்துள்ளார்.

  • Congratulations to Bindyarani Devi for winning Silver in Weightlifting at #CommonwealthGames. You have put up your best ever performance at the Games and demonstrated the zeal to raise the bar. Every Indian shares the joy of your success!

    — President of India (@rashtrapatibhvn) July 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதன்மூலம், நேற்று ஒரே நாளில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என நான்கு பதக்கங்களை குவித்துள்ளது. இந்த நான்கும் பளு தூக்குதல் போட்டியில் மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், நேற்றைய நாள் முடிவில், பதக்கப்பட்டியலில் இந்தியா 8ஆவது இடத்தில் உள்ளது. 13 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. மேலும், நியூசிலாந்து 2ஆம் இடத்திலும், தொடரை நடத்தும் இங்கிலாந்து 3ஆம் இடத்திலும் உள்ளன.

  • Congratulations to Bindyarani Devi for winning a Silver medal at CWG, Birmingham. This accomplishment is a manifestation of her tenacity and it has made every Indian very happy. I wish her the very best for her future endeavours. pic.twitter.com/4Z3cgVYZvv

    — Narendra Modi (@narendramodi) July 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஹாக்கி, பேட்மிண்டன் - இந்தியா அசத்தல்: மேலும், நேற்று இந்தியா - வேல்ஸ் நாடுகளுக்கு இடையில் மகளிர் ஹாக்கி நடைபெற்றது. இதில், இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'ஏ' பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில், வந்தனா கத்தாரியா பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்தியாவுக்கு 2 கோல்களை அடித்து அசத்தினார்.

கலப்பு இரட்டையர் பேட்மிண்டனில் 'ஏ' பிரிவு போட்டியில், இந்தியாவின் சுமீத் ரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, ஆஸ்திரேலியாவின் ட்ரான் பாம் - ஜாக் யூ ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மகளிர் குத்துச்சண்டை போட்டியில் லோவ்லினா போர்கோஹைன், காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.

  • Mirabai Chanu scripts history by winning weightlifting gold medal, setting a new record in #CommonwealthGames. Her first gold medal for India in the ongoing Games has created a wave of joy & celebration across the country. Well done, Mirabai! India is proud of you & your medals.

    — President of India (@rashtrapatibhvn) July 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இன்றைய ஹைலைட்: காமன்வெல்த் தொடரில் இன்று முக்கிய நிகழ்வாக மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. காமன்வெல்த் போட்டிகளில் முதன்முறையாக கிரிக்கெட் போட்டி இந்த தொடரில்தான் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று நடைபெறும் ஜிம்னாஸ்டிக் இறுதிப்போட்டியில் இந்தியாவின் யோகேஷ்வர் சிங்கும், பளு தூக்குதல் ஆடவர் 67 கிலோ எடைப்பிரிவில் ஜெரேமி லால்ரின்னுங்காவும் பங்கேற்பதால் இந்தியாவுக்கு இன்றும் பதக்கம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

  • Congratulations to Bindyarani Devi for winning a Silver medal at CWG, Birmingham. This accomplishment is a manifestation of her tenacity and it has made every Indian very happy. I wish her the very best for her future endeavours. pic.twitter.com/4Z3cgVYZvv

    — Narendra Modi (@narendramodi) July 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுக்கொடுத்தார் மீராபாய் சானு

Last Updated : Jul 31, 2022, 9:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.