ETV Bharat / sports

பிபா உலககோப்பை: "ரவுண்ட் 16" சுற்றுக்கு முதல் அணியாக பிரான்ஸ் தகுதி

author img

By

Published : Nov 27, 2022, 10:04 AM IST

பிரான்ஸ் அணி
பிரான்ஸ் அணி

பிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் "ரவுண்ட் 16" சுற்றுக்கு முதல் அணியாக பிரான்ஸ் தகுதி பெற்றுள்ளது.

தோஹா (கத்தார்): பிபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் தலைநகர் தோஹாவில் கோலாகலமாக நடந்து வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சிறிய அணிகளும் பலம் வாய்ந்த அணிகளுக்குச் சரிநிகராக விளையாடி வருகின்றன.

"ரவுண்ட் 16" சுற்றுக்கு பிரான்ஸ் தகுதி:

குரூப் ‘டி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி, டென்மார்க்குடன் கோதாவில் இறங்கியது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த பிரான்ஸ் அணியில், வீரர் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) 61 மற்றும் 86 நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் திருப்பி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

மறுபுறம் டென்மார்க் வீரர் ஆண்டிரியஸ் கிரிஸ்டென்சன் 68-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். இறுதி வரை போராடிய டென்மார்க் அணி 2- 1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் "ரவுண்ட் 16" சுற்றுக்கு முதல் அணியாக பிரான்ஸ் முன்னேறியது.

மெஸ்ஸி அசத்தல் கோல்:

குருப் ’சி’ பிரிவில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் மெஸ்ஸி 64-வது நிமிடத்திலும், மற்றொரு வீரர் என்சோ பெர்னாண்டஸ் 87-வது நிமிடத்திலும் கோல் திருப்பி அணியின் வெற்றிக் கனியைப் பறித்தனர்.

அதே சி பிரிவில் நடந்த மற்றொரு லீக்கில் சவுதி அரேபியாவை 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் போலந்து அணியும், கத்துக் குட்டியான துணிசியாவை 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவும் வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கின்றன.

இதையும் படிங்க: 'தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.