ETV Bharat / sports

Wimbledon: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி வரலாறு படைத்த அல்காரஸ்!

author img

By

Published : Jul 17, 2023, 10:00 AM IST

Updated : Jul 17, 2023, 10:46 AM IST

wimbledon: வரலாறு படைத்தார் அல்காரஸ் - சிதைந்தது ஜோகோவிச் கனவு!
wimbledon: வரலாறு படைத்தார் அல்காரஸ் - சிதைந்தது ஜோகோவிச் கனவு!

செர்பிய வீரர் ஜோகோவிச், 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை நோக்கிய பயணத்தில், இருபது வயதே ஆன ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், 5 செட்களில், ஜோகோவிச்சை வீழ்த்தி, அவரது வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

விம்பிள்டன் (இங்கிலாந்து): டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடர்களில் முக்கியமானதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர், கடந்த ஜூலை 3 ஆம் தேதி கோலாகலமாக, தொடங்கியது. இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், மெத்வ தேவ் (ரஷ்யா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்டெபானோஸ் (கிரீஸ்) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

ஜூலை 16-ஆம் தேதி நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், 2வது இடத்தில் உள்ள செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர்.

நடப்பு சாம்பியன் என்ற பெருமை உடன் களமிறங்கிய ஜோகோவிச், முதல் செட்டை 6–1 என மிக எளிதாக கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட அல்காரஸ், டை பிரேக்கர் வரை சென்ற இரண்டாவது செட்டை 7–6 என போராடி தன்வசப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய அல்காரஸ், மூன்றாவது செட்டை 6–1 என எளிதாக தட்டிச் சென்றார். நான்காவது செட்டை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஜோகோவிச் 6–3 என தனதாக்கி பழி தீர்த்துக் கொண்டார்.

விம்பிள்டன் பரிசுத்தொகை

இதனையடுத்து போட்டியின் முடிவு ஐந்தாவது செட்டுக்கு சென்றது. இதில் அல்காரஸ் 6–4 என செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ் ரூ.24.45 கோடி பரிசுத் தொகையும், இரண்டாவது இடம் பிடித்த ஜோகோவிச்சிற்கு, ரூ. 12.22 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

போரிஸ் பெக்கர் மற்றும் ஜார்ன் போர்க் ஆகியோருக்குப் பிறகு 1968 இல் தொடங்கிய ஓபன் சகாப்தத்தில் புல்-கோர்ட் மேஜர் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையை, கார்லஸ் அல்கராஸ் பெற்று உள்ளார். விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டியில், இது ஒரு நீண்ட, நீண்ட போட்டி. நீண்ட செட். கொண்ட போட்டியாக விளங்கியது என்று, அல்காரஸ் குறிப்பிட்டு உள்ளார்.

2002ஆம் ஆண்டு முதல், வெற்றி வாகை சூடி வந்த ஜோகோவிச், ரோஜர் பெடரர், ரஃபேல் நடால் மற்றும் ஆண்டி முர்ரே ஆகியோரை தவிர்த்து, விம்பிள்டன் பட்டம் வென்ற முதல் வீரர் ஆக உருமாரி உள்ளார் கார்லஸ் அல்காரஸ்.இது ஆடவர் டென்னிஸ் விளையாட்டில், பெரும் அதிகார மாற்றம் ஆக கருதப்படுகிறது.

ஜோகோவிச் பாராட்டு

ஃபெடரர் மற்றும் நடால் ஆகியோருக்கு எதிராக நீண்ட காலமாக மற்றும் பல குறிப்பிடத்தக்க போட்டிகளில் வெற்றி வாகையும் சூடி உள்ள, நோவாக் ஜோகோவிச், கூறியதாவது, "அல்காரஸ் போன்ற ஒரு வீரர் உடன், நான் இதுவரை விளையாடியதில்லை," என்று தெரிவித்து உள்ளார். அல்காரஸ், உலகின் சிறந்த வீரர் என்பதை, சந்தேகம் இல்லாமல் நிரூபித்து விட்டதாக, ஜோகோவிச், மேலும் குறிப்பிட்டு உள்ளார்.

5 முறை சாம்பியன் மற்றும் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் என, ஆடவர் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய ஜோகோவிச்சின் வெற்றிப் பயணத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த போட்டி அமைந்து இருந்தது என்று சொன்னால், அது மிகையல்ல...

இதையும் படிங்க: Marketa Vondrousova: சாதனை நிகழ்த்திய மார்கெட்டா: தரவரிசையில் இல்லாமல் பட்டம் வென்ற வீராங்கனை!

Last Updated :Jul 17, 2023, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.