ETV Bharat / sports

நியூசி. ஹாக்கி தொடருக்கு ராணி ராம்பால் கேப்டனாக நியமனம்

author img

By

Published : Jan 14, 2020, 9:50 PM IST

rani-rampal-named-skipper-of-indian-hockey-squad-for-new-zealand-tour
rani-rampal-named-skipper-of-indian-hockey-squad-for-new-zealand-tour

டெல்லி: நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஹாக்கி தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு, ராணி ராம்பால் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மகளிர் ஹாக்கி அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஹாக்கி தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அந்தத் தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த அணிக்கு ராணி ராம்பால் கேப்டனகாவும், சவிதா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பயிற்சியாளர் ஜோயர்ட் மரிஜின் பேசுகையில், ''நியூசிலாந்து தொடர் எங்கள் அணியில் உள்ள வீராங்கனைகளிடையே நல்ல போட்டியை உருவாக்கும். இந்தத் தொடரில் 20 பேர் கொண்ட அணியுடன் பங்கேற்கவுள்ளோம். சில போட்டிகளில் 16 பேர் கொண்ட அணியைப் பயன்படுத்துவோம். ஏனென்றால் ஒலிம்பிக்கில் 16 பேர் கொண்ட அணியை மட்டுமே பயன்படுத்த முடியும்.

கடினமான நேரங்களில் எங்கள் அணி எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன். அனைத்து வீராங்கனைகளும் அவர்களின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெறவேண்டும்'' என்றார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக ஜனவரி 27, 29ஆம் தேதிகளிலும், பிரிட்டன் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நான்காம் தேதியும் இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்திய அணி விவரம்: ராணி ராம்பால் (கேப்டன்), சவிதா (துணை கேப்டன்), ரஜினி, தீப் கிரேஸ், குர்ஜித் கவுர், ரீனா, சலீமா, சுசீலா, நிஷா, நமீதா, உதிதா, மோனிகா, லிலிமா, நேகா, சோனிகா, ஷர்மிளா தேவி, நவ்னீத் கவுர், லால்ரேம் சியாமி, வந்தனா, நவ்ஜோத் கவுர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் - மும்பை மைதானத்தில் அமைதிப் போராட்டம்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.