ETV Bharat / sports

குழந்தையுடன் உடற்பயிற்சியில் களமிறங்கிய சென்னை அணியின் ஜே ஜே!

author img

By

Published : Apr 26, 2020, 11:47 PM IST

J Jay, of Chennai team who was in the gym with the baby!
J Jay, of Chennai team who was in the gym with the baby!

சென்னையின் எஃப்சி அணியின் நட்சத்திர வீரரான ஜேஜே லால்பெக்லுவா (Jeje Lalpekhlua), தனது மகனுடன் இணைந்து உடற்பயிற்சி மேற்கொள்ளும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையின் எஃப்சி அணியின் நட்சத்திர வீரரான ஜேஜே லால்பெக்லுவா, தனது மகனுடன் இணைந்து வீட்டிலேயே உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி, தற்போது வைரலாகி வருகிறது.

அக்காணொலியில் ஜேஜே மற்றும் அவரது மகன் இருவரும் இணைந்து, தண்டால் எடுப்பது போன்றும், பிறகு தனது மகனிற்குத் தண்டால் எடுக்க ஜேஜே உதவுவது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்காணொலியை சென்னையின் எஃப்சி அணியும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

2019-20ஆம் ஆண்டிற்கான ஐஎஸ்எல் கால்பந்துத் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவின் ஏடிகே அணியிடம் படுதோல்வியடைந்து கோப்பையை நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்...! நினைவுகூறும் யுவராஜ் சிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.