ETV Bharat / sports

தடையில்லா சான்றிதழ் பெறாமல் அமெரிக்கா சென்ற வீரர்கள்.. விளக்கம் கேட்டு பாக். கிரிக்கெட் வாரியம் நேட்டீஸ்!

author img

By

Published : Aug 16, 2023, 12:48 PM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் முன் அனுமதி பெறாமல் அமெரிக்க கிரிக்கெட் தொடரில் விளையாட சென்றதாக பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
pakistan cricket board

கராச்சி: அமெரிக்காவில் நடக்கும் மைனர் லீக் போட்டிகளில் பங்கு பெறுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் பெறாமல் அந்நாட்டு வீரர்கள் சென்றதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து வீரர்களிடம் கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஃபவாத் ஆலம் அமெரிக்கா அணிக்காக விளையாடி வரும் நிலையில், அமெரிக்காவிலேயே குடியேறும் நோக்கத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் சோஹைப் மக்சூத், அர்ஷத் இக்பால், ஹுசைன் தலாத், அலி ஷபிக், இமாத் பட், உஸ்மான் ஷன்வாரி, உமைத் ஆசிப், ஜீஷான் அஷ்ரப், சைஃப் பாதர், முக்தார் அகமது மற்றும் நௌமான் அன்வர் உள்ளிட்ட பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச அரங்கில் விளையாடும் பல வீரர்கள் அமெரிக்கா லீக் தொடர்களில் விளையாடி வருவதாக கூறப்படுகிறது.

ஃபவாத் ஆலம் தவிர சில வீரர்கள் ஹசன் கான், சமி அஸ்லாம், ஹம்மாத் ஆசம், சல்மான் அர்ஷத், முசாதிக் அகமது, இம்ரான் கான் ஜூனியர் மற்றும் அலி நசீர் ஆகியோர் அமெரிக்காவிற்கு செல்லும் முன்பு NOC, அதாவது தடையில்லா சான்றிதழ் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், ஆலம் உள்பட சில வீரர்கள் மட்டும் விசிட் விசாக்கள் பெற்றுள்ளதாகவும், அமெரிக்கவிற்கு செல்லும் முன்பு வாரியத்திற்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ஜெர்மனி சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்த மதுரை மாணவர்கள்!

முன்னாள் பாகிஸ்தான் வீரரும் ஆலம் மாமனாருமான மன்சூர் அக்தர், ஹூஸ்டனில் குடியேறிய அமெரிக்க நாட்டவர் ஆவார். முன்னதாக முன்னாள் வீரர்களான சமி அஸ்லாம், ஹம்மாத் ஆசம், நௌமன் அன்வர், ரமீஸ் ராஜா ஆகியோர் அமெரிக்காவில் குடியேறி தற்போது கிரீன் கார்டு வைத்துள்ளனர்.

அமெரிக்க மைனர் லீக் கிரிக்கெட்டின் விதிகளின்படி, ஒர் வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், சொந்த உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்தும் ஒய்வு பெற்ற பின்பே இந்த லீக் போட்டிகளில் விளையாட தகுதி உடையவராக கருதப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், சொந்த உள்நாட்டி கிரிக்கெட்டில் இருந்தும் ஒய்வு பெறாத வீரர்கள் இதில் கெஸ்ட் வீரர்களாகவே விளையாட அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், அவர்களுக்கு கீரின் காட்டு அந்தஸ்து வழங்கபடமாட்டாது.

தொடக்க காலத்தில், அமெரிக்க மைனர் லீக் ஒரு அமைப்பாகவே செயல்பட்டு, வீரர்களை வேலை ரீதியான விசாக்கள் மூலமே அழைத்து வந்தது. இது அவர்களுக்கு கீரின் காட்டு பெற வழிவகுத்து வந்தது. ஆனால் இப்போது நேரடியாக வீரர்களை விசா ஓதுக்கிட்டில் இருந்து அழைக்க வேண்டும்.

வெளிநாட்டு லீக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான தடையில்லா சான்றிதழை பெற பாகிஸ்தான் வாரியம் 10 ஆயிரம் டாலர் வரை உள்ள நிபந்தனையை நடைமுறைபடுத்தி இருந்தது. ஆனால் அமெரிக்க மைனர் லீக் அணிகள் இந்த கட்டணத்தை செலுத்துவதற்கு தயக்கம் காட்டி வந்தன.

இதையும் படிங்க: Buchi Babu Trophy: 114 ஆண்டுகள் பழமை வாய்ந்த புஜ்ஜிபாபு கிரிக்கெட் தொடர் மீண்டும் தொடக்கம்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.