ETV Bharat / sports

த்ரில் வெற்றி பெற்று லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி

author img

By

Published : May 19, 2022, 7:19 AM IST

ஐபிஎல்
ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

15வது ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நவி மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

அதிரடி காட்டிய தொடக்க ஜோடி: போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் கே எல் ராகுல் - குவின்டன் டி காக் களமிறங்கினர். இருவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து பவுண்டரிகளும் , சிக்ஸர்களும் விளாசினர். அபாரமாக ஆடிய டி காக் சதம் விளாசினார்.

இறுதியில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்தது. டி காக் 70 பந்துகளில் 140 ரன்களும், ராகுல் 51 பந்துகளில் 68 ரன்கள் அடித்தனர். 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்கம் சரியாக அமையாத போதிலும் அதன் பிறகு வந்த வீரர்கள் பொறுப்பாக ஆடியதால் ஆட்டம் சூடு பிடித்தது.

ஒன் மேன் ஆர்மி ரிங்கு சிங்: கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 77 ரன்கள் தேவைப்பட்ட போது ரிங்கு சிங் - சுனில் நரேன் இணை அதிரடி காட்டியது. இறுதி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரிங்கு சிங் முதல் பந்தில் பவுண்டரியும் , இரண்டாவது பந்தில் சிக்ஸரும், மூன்றாவது பந்தில் சிக்ஸரும், 4 வது பந்தில் 2 ரன்களும் எடுத்தார்.

ஆட்டத்தை மாற்றிய கேட்ச்: பிறகு ரிங்கு சிங் அடித்த பந்தை லீவிஸ் அற்புதமாக ஒற்றை கையில் கேட்ச் பிடிக்க, இறுதி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி பந்தை எதிர்கொண்ட உமேஷ் யாதவ் ஆட்டமிழக்க லக்னோ அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. லக்னோ அணி 18 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றது.

இதையும் படிங்க: பாரா ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற ஜெர்லின் அனிதாவுக்கு வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.