ETV Bharat / sports

CSK vs MI: சென்னை அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த மும்பை

author img

By

Published : Apr 8, 2023, 9:38 PM IST

ipl match
ஐபிஎல் போட்டி

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மும்பை அணி 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, மும்பை அணியை பேட்டிங் செய்ய பணித்தார். அதன்படி, மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷண் ஆகியோர் களம் இறங்கினர்.

21 ரன்கள் எடுத்திருந்த போது தேஷ் பாண்டே பந்துவீச்சில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இஷான் கிஷண் 32 ரன்களிலும், கேமரூன் க்ரீன் 12 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த முறையும் ஏமாற்றினார். அவர் சான்ட்னர் பந்துவீச்சில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

திலக் வர்மா 22, அர்ஷத் கான் 2, டிம் டேவிட் 31, ஸ்டப்ஸ் 5 ரன்களில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. ஹிருத்திக் ஷோகீன் 18 ரன்கள் மற்றும் பியூஷ் சாவ்லா 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பந்துவீச்சை பொறுத்தவரை சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, சான்ட்னர், தேஷ்பாண்டே 2 விக்கெட்களை வீழ்த்தினர். சிசன்டா மகலா ஒரு விக்கெட் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து 158 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை அணி ஆட்டத்தை தொடங்கியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.