ETV Bharat / sports

DCvGT: 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய குஜராத்

author img

By

Published : Apr 4, 2023, 7:47 PM IST

Updated : Apr 5, 2023, 12:44 AM IST

டெல்லிக்கு எதிராக 163 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்த குஜராத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை எட்டிப்பிடித்தது

குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சு தேர்வு
குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சு தேர்வு

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் டாடா ஐபிஎல் 2023 தொடரின் 7ஆவது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 4) தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி களம் காண்கிறது. முதலில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதுகுறித்து பாண்டியா கூறுகையில், முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளோம். இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் இழந்து விட்டோம். இவருக்கு மாற்றாக டேவிட் மில்லர் வருகிறார். விஜய் சங்கர், சாய் சுதர்சன் இருக்கின்றனர். பிட்ச் அருமையாக இருக்கிறது. பனி சற்று பின்னடைவை தரலாம் எனத் தெரிவித்தார்.

முதல் இன்னிங்ஸ்: முதல் களமிறங்கிய டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்துகளுக்கு 37 ரன்களை குவித்தார். இவருடன் பேட்டிங்கை தொடங்கிய பிரித்வி ஷா 7 பந்துகளில் ஆட்டமிழந்தார். 3ஆவதாக வந்த மிட்செல் மார்ஷூம் 4 ரன்களில் விக்கெட்டானார்.

அதன் பின் வந்த சர்பராஸ் கான் நிதானமாக விளையாடி 34 பந்துகளுக்கு 30 ரன்களை எடுத்தார். இருப்பினும், ரன்ரேட் குறைவாகவே இருந்தது. 8ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய அக்சர் படேல் 22 பந்துகளில் 36 ரன்களை எடுத்து அணிக்கு வலுசேர்ந்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது.

மறுபுறம் பந்துவீச்சில் ரஷித் கான், முகமது ஷமி இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். 163 ரன்கள் வெற்றி இலக்குடன் குஜராத் அணி பேட்டிங்கை தொடங்கியது.

இரண்டாம் இன்னிங்ஸ்: குஜராத்தின் தொடக்க ஆட்டக்காரர்களான விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில் இருவரும் தலா 14 ரன்களிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இவர்களுக்கு அடுத்து வந்த சாய் சுதர்சன் சற்று அதிரடி காட்டி 35 பந்துகளுக்கு 40 ரன்களுடன விக்கெட்டானார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ரன்களில் வெளியேறினார்.

அதன்பின் வந்த விஜய் சங்கரும் 29 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 11 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை குஜராத் அணி எட்டிப்பிடித்தது

டெல்லி கேபிடல்ஸ் பிளேயிங் லெவன்: பிரித்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், சர்பராஸ் கான் (கீப்பர்), அக்சர் படேல், அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, அன்ரிச் நார்ட்ஜே.

குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: விருத்திமான் சாஹா(கீப்பர்), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவோடியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோசுவா லிட்டில், யாஷ் தயாள், அல்ஜாரி ஜோசப்.

இதையும் படிங்க: TATA IPL 2023: எந்த தேதியில், எந்த அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது.. முழு அட்டவணை..

Last Updated : Apr 5, 2023, 12:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.