ETV Bharat / sports

CSK vs RCB: உத்தப்பா - தூபே அமைத்த 'பீஸ்ட்' பார்ட்னர்ஷிப்; சிஎஸ்கேவின் மிரட்டல் கம்பேக்!

author img

By

Published : Apr 13, 2022, 8:25 AM IST

Updated : Apr 13, 2022, 8:54 AM IST

IPL 2022 MATCH 22
IPL 2022 MATCH 22

ஐபிஎல் தொடரின் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 46 பந்துகளில் 95 ரன்களை குவித்த சிவம் தூபே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

நவி மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. நவி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஃபாப் டூ பிளேசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ராபீ - தூபே சிக்ஸர் மழை: முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, ராபின் உத்தப்பா - சிவம் தூபே ஆகியோரின் அதிரடி பார்ட்னர்ஷிப்பால் 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 216 ரன்களை குவித்தது. சிவம் தூபே ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 8 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 95 ரன்களை எடுத்தார். ராபின் உத்தப்பா 50 பந்துகளில் 9 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 88 ரன்களை குவித்தார். பெங்களூரு அணி சார்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஏமாற்றமளித்த பெங்களூரு பேட்டர்கள்: இதைத் தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணி தொடக்க பேட்டர்கள், டூ பிளேசிஸ் 8, விராட் கோலி 1, அனுஜ் ராவத் 12 ரன்களில் விரைவாக வெளியேறி ஏமாற்றமளித்தனர். சற்றுநேரம், அதிரடி காட்டிய மேக்ஸ்வேல்லை 26 (11) ரன்களில் கேப்டன் ஜடேஜா ஆட்டமிழக்கச் செய்தார்.

ஆட்டத்தை திருப்பிய தீக்ஷனா: இருப்பினும், 5ஆவது விக்கெட்டுக்கு ஷாபாஸ் அகமது - சுயாஷ் பிரபுதேசாய் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினர். இந்த ஜோடி 60 ரன்களை எடுத்த நிலையில், தீக்ஷனா இருவரின் விக்கெட்டையும் அடுத்தடுத்து கைப்பற்றி ஆட்டத்தை சென்னையின் பக்கம் திருப்பினார்.

போராடிய தினேஷ் கார்த்திக்: அதன் பின்னர், தினேஷ் கார்த்திக் மட்டும் தனியாளாக நின்று அதிரடி காட்ட, மற்றவர்கள் யாரும் அவருக்கு பக்கபலமாக நின்று விளையாடவில்லை. இதனால், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம், சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆட்டநாயகனாக சிவம் தூபே தேர்வானார்.

மீளுமா மும்பை?: புள்ளிப்பட்டியலில், பெங்களூரு அணி 6 புள்ளிகளுடன் (3 வெற்றி, 2 தோல்வி) 5ஆவது இடத்திலும், சென்னை அணி 2 புள்ளிகளுடன் (1 வெற்றி, 4 தோல்வி) 9ஆவது இடத்திலும் உள்ளன. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், மும்பை - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, புனே எம்சிஏ மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதையும் படிங்க: EXCLUSIVE: மகளிர் ஐபிஎல் சாத்தியமில்லை... பிசிசிஐ மூத்த அதிகாரி...

Last Updated :Apr 13, 2022, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.