ETV Bharat / sports

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய குஜராத்... அறிமுக தொடரிலேயே அபாரம்...

author img

By

Published : May 30, 2022, 12:07 AM IST

Updated : May 30, 2022, 6:45 AM IST

ipl-2022-final-match-rajasthan-royals-vs-gujarat-titans-results
ipl-2022-final-match-rajasthan-royals-vs-gujarat-titans-results

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் அணி அறிமுக தொடரிலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது.

குஜராத்: இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைடன்ஸ், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை மட்டுமே எடுத்தனர். அதிகபட்சமாக பட்லர் 35 பந்துகளுக்கு 39 ரன்களை எடுத்தார். அதோபோல ஜெய்ஷ்வால் 16 பந்துகளுக்கு 22 ரன்களையும், ரியான் பராக் 15 பந்துகளுக்கு 15 ரன்களை எடுத்தனர்.

இதனிடையே கேப்டன் சஞ்சு சாம்சன் 11 பந்துகளுக்கு 14 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மறுப்புறம் பந்து வீச்சில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும், யாஷ் தயால், முகமது ஷமி, ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

குஜராத்துக்கு 131 ரன்கள் இலக்கு

இதையடுத்து குஜராத் அணி வீரர்கள் களமிறங்கினர். முதலில் களமிறங்கிய விருத்திமான் சாஹா 7 பந்துகளில் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மூன்றாவதாக வந்த மேத்யூ வேட் 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். சுப்மன் கில் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா விக்கெட் சரிவை தடுத்ததோடு அபாரமாக ஆடினர்.

ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர், சுப்மன் கில்லுக்கு சரியான பார்ட்னர் ஷிப் வழங்கினார். 19 பந்துகளில் இவர் 32 ரன்கள் எடுத்து அதிரடி காட்டியதோடு கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் . இதனால் 11 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. கில் 43 பந்துகளில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  • Good time to quote Henry Ford? 😇

    "Whether you think you can, or you think you can't – you're right!" pic.twitter.com/jJK3kF66ji

    — Gujarat Titans (@gujarat_titans) May 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: 3ஆவது முறையாக பட்டத்தை வென்றது சூப்பர்நோவாஸ்

Last Updated :May 30, 2022, 6:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.