IPL 2021: டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு

author img

By

Published : Sep 25, 2021, 3:20 PM IST

Updated : Sep 25, 2021, 6:02 PM IST

DC vs RR, டெல்லி கேப்பிடல்ஸ், சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் ராயல்ஸ், ரிஷப் பந்த்

டெல்லி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

அபுதாபி: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

இதையடுத்து, இரண்டாம் கட்டப் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 36ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று (செப். 25) மோதுகிறது.

இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.

பிளேயிங் லெவனில் மாற்றங்கள்

டெல்லி அணி தரப்பில் ஸ்டாய்னிஸ் நீக்கப்பட்டு லலித் யாத்வுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணியில் எவின் லீவிஸ், கிறிஸ் மோரிஸ் ஆகியோருக்கு பதிலாக இரண்டு தென்னாப்பிரிக்க வீரர்கள் டேவிட் மில்லர், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், பிருத்வி ஷா, சிம்ரோன் ஹெட்மையர், ஸ்டாய்னிஸ், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், அன்ரிச் நோர்க்கியா.

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், டேவிட் மில்லர், லியம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோம்ரோர், ரியான் பராக், ராகுல் திவேத்தியா, முஷ்தபிஷூர் ரஹ்மான், சேதன் சக்காரியா, கார்த்திக் தியாகி, தப்ரைஸ் ஷம்ஸி.

ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 23 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், ராஜஸ்தான் 12 போட்டிகளிலும், டெல்லி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதையும் படிங்க: ஐபிஎல் 2021: ஆர்சிபியை வீழ்த்திய சிஎஸ்கே - புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்

Last Updated :Sep 25, 2021, 6:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.