ETV Bharat / sports

IPL 2021 MI vs KKR : கொல்கத்தா அணிக்கு 153 ரன்கள் இலக்கு; ரஸ்ஸல் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

author img

By

Published : Apr 13, 2021, 9:53 PM IST

Updated : Apr 14, 2021, 6:20 AM IST

கொல்கத்தா அணிக்கு 153 ரன்கள் இலக்கு; ரஸ்ஸல் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்
கொல்கத்தா அணிக்கு 153 ரன்கள் இலக்கு; ரஸ்ஸல் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

சென்னை : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை எடுத்துள்ளது.

சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஐந்தாவது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பந்து வீச முடிவெடுத்தது.

இதனைத் தொடர்ந்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குயின்டன் டி காக், ரோஹித் சர்மா களமிறங்கினர். பவர்-பிளேயில் அதிரடிக்கு பெயர்போன டி காக் 2 (6) ரன்களில், வருண் சக்கரவர்த்தியின் சுழலில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

அதைத்தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் களமிறங்கி, ஹர்பஜன் வீசிய மூன்றாம் ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி எதிரணியை மிரளவைத்தார்.

ரோஹித் சற்று நிதானம் காட்ட, சூர்யகுமார் 33 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் ஷகிப் அல் ஹசான் பந்தை தூக்கி அடித்து, சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவர் அடித்த 56 ரன்களில் 7 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

அவரைத்தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. இஷான் கிஷன் 1 (3) ரன்னிலும், ரோஹித் 43 (32) ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 15 (17) ரன்னிலும், பொல்லார்ட் 5 (8) ரன்னிலும், ஜேன்சன் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.

கடைசி ஓவரிலும் இறுதி வரிசை வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற, மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை எடுத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் ரஸ்ஸல் 5 விக்கெட்டுகளையும் , கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஷகிப், பிரசித், வருண் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Last Updated :Apr 14, 2021, 6:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.