ETV Bharat / sports

IPL 2021 DC vs RCB: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு

author img

By

Published : Apr 27, 2021, 7:28 PM IST

டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
IPL 2021 LEAGUE 22 DC vs RCB TOSS UPDATE

டெல்லி - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார்.

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டியானது அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அஸ்வினுக்குப் பதிலாக இஷாந்த் சர்மா விளையாடவுள்ளார். பெங்களூரு சார்பில் டான் கிறிஸ்டியன், சைனி நீக்கப்பட்டு ராஜத் பட்டிதர், டேனியல் சாம்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிகர் தவான், பிருத்வி ஷா, சிம்ரோன் ஹெட்மையர், ஸ்டாய்னிஸ், ஸ்டீவ் ஸ்மித், அக்சர் பட்டேல், இஷாந்த் சர்மா, ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல், தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர், ராஜத் பட்டிதர், யஷ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், டேனியல் சாம்ஸ், கைல் ஜேமிசன்

இதையும் படிங்க: IPL 2021 DC vs RCB: ஆர்சிபியிடம் ஆதிக்கத்தை தொடருமா டெல்லி கேப்பிடல்ஸ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.