ETV Bharat / sports

ஐபிஎல் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற டெல்லி... பேட்டிங்கைத் தேர்வு செய்த ஸ்ரேயாஸ்

author img

By

Published : Nov 10, 2020, 7:03 PM IST

துபாய்: 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

IPL Finals:Delhi Capitals opt to bat against mi
IPL Finals:Delhi Capitals opt to bat against mi

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆடுகிறது.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

ஐந்தாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் மும்பை அணியின், முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் டெல்ல் அணியும் களமிறங்குவதால், போட்டி மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

மும்பை அணி விவரம்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, குர்ணால் பாண்டியா, பொல்லார்ட், கவுல்டர் நைல், ஜெயந்த் யாதவ், போல்ட், பும்ரா.

டெல்லி அணி விவரம்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஸ்டோய்னிஸ், ஷிகர் தவான், ரஹானே, ரிஷப் பண்ட், ஹெட்மயர், அக்சர் படேல், ரபாடா, அஸ்வின், நார்கியே, பிரவீன் தூபே.

இதையும் படிங்க: ஐந்து வீரர்கள் சிறப்பாக ஆடிவிட்டால், மும்பைக்கு 5ஆவது கோப்பை உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.