ETV Bharat / sports

ஐந்து வீரர்கள் சிறப்பாக ஆடிவிட்டால், மும்பைக்கு 5ஆவது கோப்பை உறுதி!

author img

By

Published : Nov 10, 2020, 3:33 PM IST

டெல்லி அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்றால், மும்பை அணியின் இந்த ஐந்து வீரர்களின் ஆட்டம் மிகமுக்கியமானது.

ipl-2020-final-mi-vs-dc-5-mi-players-to-watch-out-for
ipl-2020-final-mi-vs-dc-5-mi-players-to-watch-out-for

ஐபிஎல் கோப்பையை நான்கு முறை வென்றுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாகக் கோப்பையை வெல்வதற்கு இறுதிப் போட்டியில் இன்று ஆடவுள்ளது.

இந்தத் தொடரின் தொடக்கம் முதலே ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி, ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த அணியில் அனுபவ வீரர்களுடன் இணைந்து இளம் வீரர்களும் பட்டையை கிளப்பி வருகின்றனர். இன்று நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் மும்பை அணி வெற்றிபெற வேண்டும் என்றால், மும்பை அணியின் இந்த 5 வீரர்கள் நிச்சயம் பங்களிக்க வேண்டும்.

டி காக்:

ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் கஷ்டப்பட்டாலும், சரியான நேரத்தில் ஃபார்மிற்கு வந்து மும்பை அணியை தொடக்க வீரராக ஜொலிக்கிறார். அதேபோல் இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த விக்கெட் கீப்பரும் இவர் தான். 15 போட்டிகளில் ஆடியுள்ள இவர், 483 ரன்கள் குவித்துள்ளார்.

டி காக்
டி காக்

இஷான் கிஷன்:

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரம். ஒவ்வொரு முறையும் மும்பை அணி இவரை களமிறக்கும்போதும் கில்லியாக செயல்பட்டு, இறுதிவரை நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுக்கிறார். எந்த நேரத்தில் டிடென்சிவ் ஆட்டம் ஆட வேண்டும், எந்த நேரத்தில் அட்டாக் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து ஆடுவதால், இவரின் விக்கெட்டை வீழ்த்துவது எதிரணிகளுக்கு கடினமாக உள்ளது. இந்தத் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரரும் இவர் தான். கிட்டத்தட்ட 29 சிக்சர்களை விளாசியுள்ளார். இவர் 13 போட்டிகளில் ஆடி 483 ரன்களை குவித்துள்ளார்.

இஷான் கிஷன்
இஷான் கிஷன்

பும்ரா:

பெயரைக் கேட்டவுன் அனைவரும் சொல்வார்கள் டெத் ஓவர்களில் இவரை மிஞ்சுவதற்கு சர்வதேச கிரிக்கெட்டில் இப்போது யாரும் இல்லை. கேப்டன் ரோஹித்தாக இருந்தாலும் சரி, பொல்லார்ட் ஆக இருந்தாலும் சரி விக்கெட் வேண்டுமென்றால், பந்து நேரடியாக பும்ராவின் கைகளில் கொடுத்துவிடுவார்கள். மாடர்ன் டே யார்க்கர் கிங் என ரசிகர்கள் இவரை போற்றி வருகின்றனர். 14 போட்டிகளில் ஆடியுள்ள பும்ரா, 27 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்புள் கேப்பை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பும்ரா
பும்ரா

ட்ரெண்ட் போல்ட்:

மும்பை அணியின் பவர் ப்ளே ஸ்பெஷலிஸ்ட். சொந்த காரணங்களுக்காக மலிங்கா தொடரைவிட்டு விலக, அந்த இடத்தை சீறும் சிறப்புமாக போல்ட் நிரப்பியுள்ளார். பவர் ப்ளே ஓவர்களில் இவர் போடும் ஸ்விங் பந்துகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எதிரணிகள் விக்கெட்டுகளை கொடுத்து பெவிலியன் திரும்பி வருகின்றனர். 14 போட்டிகளில் ஆடியுள்ள போல்ட் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

போல்ட்
போல்ட்

பொல்லார்ட்:

ஒரு பந்துவீச்சாளர் சரியாக பந்துவீசவில்லையா, பொல்லார்ட் இருக்கிறார். கேப்டனுக்கு காயமா பொல்லார்ட் இருக்கிறார். இறுதி ஓவர்களில் ரன்கள் சேர்க்க வேண்டுமா பொல்லார்ட் இருக்கிறார். விக்கெட்டுகள் போவதை தடுக்க வேண்டுமா பொல்லார்ட் இருக்கிறார். பிடிக்க முடியாத கேட்ச்களை பிடிக்க வேண்டுமா பொல்லார்ட் இருக்கிறார். இறுதிப் போட்டிகளில் வென்றுகொடுக்க வேண்டுமா பொல்லார்ட் இருக்கிறார். இப்படி ஒரு அணிக்கு அனைத்து பணிகளையும் சிறப்பாக ஆடக் கூடிய வீரராக பொல்லார்ட் உள்ளார். வேறு எந்த அணிக்கும், இவரைப் போல் ஒரு வீரர் அமைவாரா என்பது ஆச்சரியப்படும் வகையில் மும்பை அணியின் சொத்து போல் பொல்லார்ட் ஆடுகிறார். இந்தத் தொடரில் 259 ரன்கள் எடுத்துள்ள பொல்லார்ட், 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

பொல்லார்ட்
பொல்லார்ட்

இதையும் படிங்க: முதல் முறையாக மகளிர் டி20 சேலஞ்ச் கோப்பையை வென்ற ட்ரையல்ப்ளேசர்ஸ்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.