ETV Bharat / sports

கொல்கத்தா - பெங்களூரு போட்டி : டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு!

author img

By

Published : Apr 19, 2019, 8:54 PM IST

KKR vs RCB

கொல்கத்தா : பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

12ஆவது ஐபிஎல் சீசனுக்கான 35ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ஐபிஎல் தொடரில் ப்ளே-ஆஃப் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்துவிட்ட நிலையில் இன்றையப் போட்டியில் ஆறுதல் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்குகின்றன. டேஸ் ஸ்டெயின் பெங்களூரு அணிக்கு திரும்பியுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொல்கத்தா மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதால் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணியில் எவ்வித மாற்றங்களுமின்றி அதே அணியுடன் களமிறங்குகிறது.

அதேபோல் பெங்களூரு அணியில் டி வில்லியர்ஸ் உடல்நலக்குறைவால் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கிளாஸன் விளையாடுகிறார். அதேபோல் டேல் ஸ்டெயின் இடம்பெற்றுள்ளார்.

கொல்கத்தா
கொல்கத்தா அணி


கொல்கத்தா அணி விவரம் : தினேஷ் கார்த்திக்(கேப்டன்), கிறிஸ் லின், சுனில் நரைன், நிதீஷ் ராணா, ராபின் உத்தப்பா, ஆண்ட்ரூ ரஸல், சுப்மன் கில், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஹார்ரி குர்னே,

கொல்கத்தா
கொல்கத்தா அணி

பெங்களூரு அணி விவரம் : விராட் கோலி(கேப்டன்), கிளாஸன், பார்த்திவ் படேல், மார்கஸ் ஸ்டோனிஸ், மொயின் அலி, சாஹல், பவன் நெகி, டேல் ஸ்டெயின், நவ்தீப் சைனி, சிராஜ்,அக்‌ஷ்தீப் நாத்.

Intro:Body:

KKR vs RCB toss


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.