ETV Bharat / sports

விஸ்வரூபம் எடுக்குமா பெங்களூரு? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

author img

By

Published : Apr 5, 2019, 4:51 PM IST

பெங்களூரு - கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

பெங்களூரு : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.


பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியுடன் மோதவுள்ளது. இந்த தொடரில் பெங்களூரு அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியே தழுவியுள்ளதால், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மறுமுனையில், கொல்கத்தா அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.

பெங்களூரு அணியை பொறுத்த வரையில், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய மூன்றிலும் சொதப்பி வருகிறது. அணியின் கேப்டன் கோலி எந்த வரிசையில் பேட்டிங் செய்யவேண்டும் என்பதில் தடுமாறி வருகிறார். இதனால், அவர் கேப்டன்ஷிப்பிலும் திணறி வருகிறார்.

அதுமட்டுமின்றி, ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் பெங்களூரு அணி ஹெட்மயர், பார்த்திவ் படேல், அக்ஷ்தீப் நாத் ஆகிய மூன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களோடு களமிறங்கியது.

பந்துவீச்சில் சாஹலைத் தவிர வேறு எந்த பந்துவீச்சாளர்களும் சொல்லிக்கொள்ளும் வகையில் சோபிக்கவில்லை. இதனால், இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காணும் வகையில் முதல் வெற்றியை பதிவு செய்யலாம் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கொல்கத்தாவை பொறுத்த வரையில், ரஸல் என்கிற ஆல்ரவுண்டர் ஒருவரே அணியின் வெற்றிக்கு அதிக பங்களிப்பை அளித்து வருகிறார். பேட்டிங்கில் நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், உத்தப்பா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். தொடக்க வீரர்களான கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் மோசமான நிலையில் இருந்தாலும், பெங்களூரு அணிக்கு எதிராக இவ்விரு வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை மோதியுள்ளனது. இதில் கொல்கத்தா அணி 13 போட்டிகளிலும், பெங்களூரு அணி 9 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இதில், இறுதியாக ஆடிய நான்கு போட்டிகளில் பெங்களூரு அணி ஒரு ஆட்டத்திலும் வெற்றிபெறவில்லை.

இதனால், கொல்கத்தா அணிக்கு எதிராகவும், இந்த தொடரில் சந்தித்து வரும் தொடர் தோல்விக்கும் பெங்களூரு அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.