ETV Bharat / sports

மகளிர் டெஸ்ட்: உறுதியாக போராடி டிராவில் முடித்த இந்திய அணி

author img

By

Published : Jun 20, 2021, 5:47 PM IST

சினே ராணா
சினே ராணா

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சினே ராணாவின் உறுதியான ஆட்டத்தால் இந்திய மகளிர் அணி ஆட்டத்தை டிராவில் முடித்துள்ளது.

பிரிஸ்டால் (இங்கிலாந்து): இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான நான்கு-நாள் டெஸ்ட் போட்டி ஜூன் 16ஆம் தேதி பிரிஸ்டால் கவுண்டி மைதானத்தில் தொடங்கியது.

பலமிக்க இங்கிலாந்து

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹூத்தர் நைட், பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 396 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது.

திணறிய இந்தியா

இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, சிறப்பான தொடக்கத்தை அளித்தது. ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை பொறுப்புடன் விளையாடி ரன்களைச் சேர்த்தது. இந்த இணை 167 ரன்கள் குவித்த நிலையில், ஷஃபாலி வர்மா தனது விக்கெட்டை இழந்தார். அவர் 13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 152 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து, தனது முதல் சதத்தை பதிவுச்செய்ய தவறினார்.

இதன்பின்னர், ஸ்மிருதி மந்தனாவும் 78(155) ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்னர், களமிறங்கிய ஷிகா பாண்டே, மிதாலி ராஜ், புனம் ராவத் ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

ஷஃபாலி வர்மா
இரண்டு இன்னிங்ஸிலும் கலக்கிய ஷஃபாலி வர்மா

இதனால், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது.

இந்திய ஃபாலோ-ஆன்

மூன்றாம் நாள் ஆட்டத்தை (ஜூன் 18) ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா ஆகியோர் தொடங்கினர். தொடக்கத்திலேயே ஹர்மன்பிரீத் 4 ரன்களுக்கும், தானியா பாட்டீயா ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர்.

ஃபாலோ-ஆனை தவிர்க்க தீப்தி சர்மா போராடிவந்தார். ஆனார். ஆனால் மறுமுனையில் இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பூஜா வஸ்திரகர், ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்களை எடுத்தது.

இரண்டாவது இன்னிங்ஸ்

இதனால், இந்திய அணியை அடுத்து பேட்டிங்கிற்கு அழைத்தது இங்கிலாந்து. அதன்படி மீண்டும் இந்தியா பேட்டர்களான ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். முதல் இன்னிங்ஸில் பொறுப்புடன் ஆடிய ஸ்மிருதி, இம்முறை விரைவாக தனது விக்கெட்டை இழந்துவிட்டார். இரண்டாம் இன்னிங்ஸில் ஸ்மிருதி 8 ரன்களே எடுத்தார்.

அதன்பின்னர், மழை குறுக்கிட்ட காரணத்தால் அன்றைய ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்டது. அப்போது இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களை எடுத்து, இங்கிலாந்தை விட 84 ரன்கள் பின்தங்கியிருந்தது.

இறுதிநாள் போர்

நான்காம் நாள் (ஜுன் 19) களத்தில் இருந்த ஷஃபாலி வர்மாவும் தீப்தி சர்மாவும் சற்று பொறுப்புடன் ஆடினர். ஆனால், இம்முறையும் அரைசதம் கடந்த ஷஃபாலி 63 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர், தீப்தி சர்மா 54 ரன்களிலும், மிதாலி ராஜ் 4 ரன்களிலும், புனம் ராவத் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

  • That was some batting from Sneh Rana & Taniya Bhatia who showed resilience to help #TeamIndia secure a draw🔝

    Top-notch effort from 🇮🇳.👏🏻 #ENGvIND

    Sneh Rana - 8️⃣0️⃣*
    Taniya Bhatia - 4️⃣4️⃣*
    Their partnership 🤝🏻 - 1️⃣0️⃣4️⃣*

    OUTSTANDING 👌🏻💪🏻

    Scorecard 👉 https://t.co/Em31vo4nWB pic.twitter.com/oHYcqciFAM

    — BCCI Women (@BCCIWomen) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதன்பின் களமிறங்கிய பூஜா வஸ்திரகரும், வஹர்மன்பீரித் கவுரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க 199 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. அப்போது இந்திய அணி 34 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்து.

சீறிய சினே ராணா

முதல் இன்னிங்ஸில் இந்தியாவை எளிதாக ஆட்டமிழக்க வைத்ததால், இரண்டாம் இன்னிங்ஸ்களிலும் கட்டுப்படுத்திவிடலாம் என்று நினைத்த இங்கிலாந்து அணிக்கு இந்திய வீராங்கனைகள் அதிர்ச்சியளித்தனர்.

ஷஃபாலி வர்மா
இரண்டு இன்னிங்ஸிலும் கலக்கிய ஷஃபாலி வர்மா

அப்போது, பந்துவீச்சாளரான சினே ராணாவும், ஷிகா பாண்டேவும் நிலையான ஃபாட்னர்ஷிப்பை வழங்கினர். இதனால் தோல்வி முகத்திலிருந்த இந்திய அணி டிராவை நோக்கி பயணமானது.

ஷிகா பாண்டே 18 ரன்களில் வெளியேறினாலும், அடுத்து வந்த தானியா பாட்டீயாவும் சினே ராணவுக்கு பக்கபலமாக நின்று விளையாடினார். இறுதிவரை இந்த ஜோடியை இங்கிலாந்து பந்துவீச்சாளர்களால் பிரிக்கமுடியவில்லை.

போரில் போராட்டமே முக்கியம்

இதனால், போட்டி டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 344 ரன்களை எடுத்திருந்தது.

இந்திய அணி தரப்பில் சினே ராணா 80(154) ரன்களுடனும், தானியா பாட்டீயா 44(115) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய மகளிர் அணி ஏழாண்டுகளுக்கு பின்னர் விளையாடிய இந்த டெஸ்ட் போட்டி விளையாடியுள்ள நிலையில், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை அதன் கோட்டையின் வைத்து கடுமையாக போரிட்டுள்ள இந்திய வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி வருகின்றனர்

வேண்டும் ஐந்து நாள்கள்

இந்திய ஆடவர் அணியை போலவே மகளிர் அணியும் போதுமான அளவில் டெஸ்ட் போட்டியை விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வழிவகை செய்யவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

மேலும், போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ஹூத்தர் நைட், மகளிர் டெஸ்ட் போட்டிகளையும் ஐந்து நாள்கள் நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : காலியான கிங் கோலி; குஷியில் நியூசி.,

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.