ETV Bharat / sports

ஆஸி. அணியின் 5 பேட்ஸ்மேன்கள் அரைசதம்... இந்திய அணியின் 5 பவுலர்களும் அரைசதம்...!

author img

By

Published : Nov 29, 2020, 1:21 PM IST

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 390 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

australia fixed 390 runs target of india
australia fixed 390 runs target of india

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் ஆரோன ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வழக்கம்போல் வார்னர் - ஃபின்ச் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் போட்டியைப் போல் இருவரும் விரைவாக ரன்கள் சேர்த்தனர். இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் தவித்தனர்.

அரைதம் விளாசிய தொடக்க வீரர்கள் ஃபின்ச் - வார்னர்
அரைதம் விளாசிய தொடக்க வீரர்கள் ஃபின்ச் - வார்னர்

கடந்த 14 போட்டிகளில் பவர் ப்ளே ஓவர்களில் இந்திய அணி வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளது. அது இந்தப் போட்டியிலும் தொடர, விக்கெட்டிற்காக அடைக்காத்த கோழியாக வீரர்கள் காத்திருந்தனர்.

இரு வீரர்கள் முதல் 10 ஓவர்களில் 59 ரன்களும், அடுத்த 10 ஓவர்களில் 58 ரன்களும் சேர்க்க, ஆஸி. அணி 20 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்தது. இருவரும் அரைசதம் கடந்து அதிரடியாக ஆடத் தொடங்கினர்.

பின்னர் ஷமி வீசிய 23ஆவது ஓவரில் ஃபின்ச் 60 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது. ஆனால் ஃபின்ச் போன பின்னர், ஸ்டீவ் ஸ்மித் வந்தார்.

சதம் விளாசிய ஸ்டீவ்
சதம் விளாசிய ஸ்டீவ்

இதையடுத்து சிறப்பாக ஆடிவந்த வார்னர் 83 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஃபில்டிங்கால் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்த ஆஸி. லபுஷானை களமிறக்கியது.

ஒருமுனையில் லபுஷான் நிதானமாக ஆட, மறுமனையில் ஸ்டீவ் ஸ்மித்தோ ருத்ர தாண்டவம் காட்டினார். 38 பந்துகளில் அரைசதம் கடந்த இவர், அதன்பின்னர் ஆடிய ஒவ்வொரு ஓவருக்கும் இரண்டு பவுண்டரிகளை விளாசினார்.

இவரை வீழ்த்துவதற்கு பும்ராவை கோலி அழைத்தார். ஆனால் அந்த ஓவரில் ஸ்மித் 3 பவுண்டரிகளை விளாசி பதிலளித்தார். 40 ஓவர்கள் முடிவில் ஆஸி. அணி 275 ரன்களை எடுத்தது. அடுத்த ஓவரில் ஸ்மித், முதல் போட்டியை போல் மீண்டும் 62 பந்துகளில் சதம் விளாசி தேஜாவு காட்டினார்.

இந்திய அணிக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் ஆடிய 17 இன்னிங்ஸ்களில் 5 சதம் மற்றும் 5 அரைசதம் விளாசியுள்ளார்.

அதன்பின் ஸ்மித் 104 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் - லபுஷான் இணைந்தனர். இருவரும் அதிரடியாக ஆட, ஆஸி. அனியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. லபுஷானும் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார்.

அரைசதம் விளாசிய லபுஷான்
அரைசதம் விளாசிய லபுஷான்

முன்னதாக அவர் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டது இன்னும் பிரச்னையாக மாறியது. 47 ஓவர்களில் ஆஸி.யின் ஸ்கோர் 350ஐ கடந்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளர்களான பும்ரா, ஷமி ஆகியோரின் பந்துகளை வெளுத்து வாங்கினார்.

49ஆவது ஓவரில் லபுஷான் 61 பந்துகளில் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்த, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஆடிய மேக்ஸ்வெல் 29 பந்துகளுக்கு 63 ரன்கள் விளாசினார்.

அரைசதம் அடித்த மேக்ஸ்
அரைசதம் அடித்த மேக்ஸ்

இந்திய அணியில் பும்ரா 10 ஓவர்களில் 79 ரன்கள், ஷமி 9 ஓவர்கள் வீசி 73 ரன்கள், சைனி 7 ஓவர்களுக்கு 70 ரன்கள், சாஹல் 9 ஓவர்களுக்கு 71 ரன்கள் என பாரபட்சம் பார்க்கமால் விட்டுக்கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய அணிக்காக 250 ஒருநாள் போட்டிகள்.. கோலியின் அடுத்த சாதனை...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.