ETV Bharat / sports

அதிரடிக்காரன் மச்சான்.. மச்சானே... விராட் கோலியின் எழுச்சியால் இந்தியா திரில் வெற்றி

author img

By

Published : Oct 23, 2022, 6:24 PM IST

டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

india beats pakistan in twenty twenty world cup match
india beats pakistan in twenty twenty world cup match

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி, அந்நாட்டிலுள்ள மெல்போர்ன் நகரத்தில் இன்று நடந்தது.

அதன்படி, டாஸில் வென்ற இந்தியா பந்துவீச்சினை தேர்வு செய்தது. பின், களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் படிப்படியாக அதிரடி காட்டினர். பாகிஸ்தான் சார்பில் இப்திகார் அகமது 51 ரன்களும், ஷான் மசூத் 52 ரன்களும் எடுத்திருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 159 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினர். சூர்யகுமாரும் அக்சர் படேலும் சொற்ப ரன்களிலேயே பெவிலியன் திரும்பினர்.

அடுத்து களமிறங்கிய சீனியர் வீரரான விராட் கோலி, ஹர்திக் பாண்டியா இணை 5ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கி, அணியின் ஸ்கோர் 100ஐ தாண்ட உதவியது. பாண்டியா 40 ரன்னில் அவுட்டாக,அடுத்தடுத்து வந்த வீரர்களும் பதற்றத்தில் அவுட்டாகினர்.

இறுதி ஓவர் வரை யார் வெல்வார் என்ற பதற்றம் நீடித்தது. இருப்பினும், விராட் கோலியின் நிதானமான எழுச்சிமிகு ஆட்டத்தால், இந்திய அணி கரை சேர்ந்தது.

வெற்றி இலக்க ரன்னான, 160ஆவது ரன்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் அஸ்வின் அடித்தார்.

இதன்மூலம் டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. விராட் கோலி 82 ரன்களுடன் இறுதி வரையும் களத்தில் நின்றார்.

இந்த வெற்றியையும் விராட் கோலியின் எழுச்சியினையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பந்து வீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.