ETV Bharat / sports

மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து அணி! இதுல இவங்க தான் பர்ஸ்டாம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 11:24 AM IST

ICC WORLDCUP
இங்கிலாந்து அணி

ICC WORLDCUP: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதேநேரம் எந்த அணியும் பெற்றிராத மோசமான சாதனையையும் இங்கிலாந்து அணி படைத்து உள்ளது.

டெல்லி: உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 11 வெவ்வேறு அணிகளிடம் தோல்வியை கண்ட முதல் அணி என்ற மோசமான சாதனைக்கு இங்கிலாந்து அணி உரிமையாளராகி உள்ளது.

அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (அக். 15) நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹமனுல்லா குர்பஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரன் ஆகியோர் முதலில் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் தங்களது அணிக்கு ரன்களைச் சேர்த்தனர். பின்னர், அதிரடியாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் 50 ஓவரில் ஆல் அவுட் ஆக மொத்தம் 284 ரன்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு கிடைத்தன.

பின், 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடத் தொடங்கியது. தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்படத் தொடங்கியது.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சாளர் மூஜிப், ரசித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், முகம்மது நபி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அடுத்தடுத்து இங்கிலாந்து அணிக்கு விக்கெட்டுகள் சரிய 40.3 ஓவர்களுக்குள் அந்த அணி 215 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

ஆப்கானிஸ்தான் அணி வரலாற்றில் இந்த போட்டி மிக முக்கியனமான ஒன்றாகும். நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணி மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகி உள்ளது.

இங்கிலாந்து அணி அதன் வரலாற்றில், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இந்தியா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாவே ஆகிய 11 வெவ்வேறு அணிகளிடம் தோல்வியை தழுவி உள்ளது. மேலும், ஐசிசி உலக கோப்பை வரலாற்றில் அதிக அணிகளுக்கு எதிராக தோல்வியைத் தழுவிய நாடு என்ற துரதிர்ஷடவசமான சாதனையையும் இங்கிலாந்து அணி படைத்தது.

அந்த பட்டியலில் இங்கிலாந்து 11 தோல்விகளும், வெஸ்ட் இண்டீஸ் 10, தென் ஆப்பிரிக்கா 9, ஆஸ்திரேலியா 8, இந்தியா 8, பாகிஸ்தான் 8, இலங்கை 8, நியூஸ்சிலாந்து 7 ஆகிய அணிகள் வரிசையாக தோல்விகளை சந்தித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆப்கான் கேப்டன் அவுட்டுக்கு இமிடேட் செய்தது ஏன்? - பும்ரா விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.