ETV Bharat / sports

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: ரோகித் சர்மாவின் அபார ஆட்டம்.. இந்திய அணிக்கு 2வது வெற்றி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 1:49 PM IST

Updated : Oct 11, 2023, 9:07 PM IST

India Vs Afghanistan
India Vs Afghanistan

20:59 October 11

இந்திய அணி அபார வெற்றி

உலகக் கோப்பை கிரிகெட் தொடருக்கான லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

20:27 October 11

India Vs Afghanistan : 26 ஓவர்கள் முடிவில்!

இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்துள்ளது. வெற்றி பெற இன்னும் 66 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.

20:23 October 11

India Vs Afghanistan : ரோஹித் போல்ட்!

அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா ரஷித் கான் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

20:01 October 11

India Vs Afghanistan : உலக கோப்பையில் அதிக சதம்!

இந்த போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்ததை சேர்த்து மொத்தமாக உலக கோப்பையில் 7 சதம் விளாசியுள்ளார். இதன் மூலம் உலக கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

19:46 October 11

India Vs Afghanistan : ரோஹித் சதம்!

அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, 63 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

19:04 October 11

India Vs Afghanistan : ரோஹித் அரைசதம்!

தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய ரோஹித் சர்மா 30 பந்துகளில் அரைசதம் கடந்துள்ளார்.

19:02 October 11

India Vs Afghanistan : அதிரடி ஆட்டத்தில் இந்திய அணி!

273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் ஏதும் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது.

17:52 October 11

India Vs Afghanistan : இந்திய அணிக்கு 273 ரன்கள் இலக்கு!

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

17:32 October 11

India Vs Afghanistan : பும்ரா பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்!

போட்டியின் 45 ஓவரை வீசிய பும்ரா அடுத்தடுத்து விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். நபி 19, நஜிபுல்லா சத்ரன் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

17:25 October 11

India Vs Afghanistan : ஹஷ்மத்துல்லா ஷாஹிதி அவுட்!

80 ரன்களை குவித்து சிறப்பாக விளையாடி வந்த ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

16:44 October 11

India Vs Afghanistan : ஆட்டமிழந்தார் அஸ்மத்துல்லா உமர்சாய்!

நிதானமாக விளையாடி 62 ரன்கள் எடுத்த அஸ்மத்துல்லா உமர்சாய், ஹர்திக் பாண்டிய வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

16:40 October 11

India Vs Afghanistan : உமர்சாய், ஹஷ்மத்துல்லா அரைசதம்!

ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்கள் சேர்ப்ப ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், நிதானமாக விளையாடிய உமர்சாய் மற்றும் ஹஷ்மத்துல்லா அரைசதம் விளாசியுள்ளனர்.

16:01 October 11

India Vs Afghanistan : ஆப்கானிஸ்தான் நிதானம்!

26 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 118 ரன்கள் சேர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றது. அஸ்மத்துல்லா உமர்சாய் 28, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 26 ரன்களலுடனும் களத்தில் உள்ளனர்.

15:58 October 11

India Vs Afghanistan : தொடரின் 100வது சிக்ஸ்!

13வது உலக கோப்பை தொடரின் 100வது சிக்ஸரை ஹஷ்மத்துல்லா ஷாஹிதி விளாசியுள்ளார்.

15:39 October 11

India Vs Afghanistan : 20 ஓவர்கள் முடிவில்!

20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 83 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.

15:29 October 11

India Vs Afghanistan : பவர் ப்ளேவில் பும்ரா!

இதுவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உலகக் கோப்பையில் பவர் ப்ளேவில் மட்டும் 43 ஓவர்கள் வீசியுள்ளார். இதில் 7 விக்கெட்களை வீழ்த்திய அவர், 127 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். பவர் ப்ளேவில் அவரது சராசரி 17.71 ஆக உள்ளது. மேலும், அவர் 197 டாட் பால்களை வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

15:14 October 11

India Vs Afghanistan : தாக்கூருக்கு முதல் விக்கெட்!

போட்டியின் 14வது ஓவரை வீசிய தாக்கூர், அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரஹ்மத் ஷாவின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

15:00 October 11

India Vs Afghanistan : குர்பாஸ் அவுட்!

போட்டியின் 13வது ஓவரில் குர்பாஸ் சிக்ஸ் அடிக்க முயன்று தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியுள்ளார்.

14:50 October 11

India Vs Afghanistan : பவர் ப்ளே முடிவில்!

போட்டியின் 10 ஓவர்கள் முடிவடைந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி 48 ரன்களை சேர்த்துள்ளது. குர்பாஸ் 20 ரன்னும், ரஹ்மத் ஷா 4 ரன்னும் எடுத்து களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.

14:46 October 11

India Vs Afghanistan : 9 ஓவர்கள் முடிவில்!

ஆப்கானிஸ்தான் அணி 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்களை சேர்த்துள்ளது.

14:41 October 11

India Vs Afghanistan : 8 ஓவர்களில் 37 ரன்!

ஆப்கானிஸ்தான் அணி 8 ஓவர்கள் முடிவில் 37 ரன்கள் குவித்து உள்ளது. ரஹமத்துல்லா 10 ரன்னும், ரஹமத் ஷா 4 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

14:39 October 11

India Vs Afghanistan : ரஹ்மத் ஷா காயம்!

முகமது சீராஜ் வீசிய 7.4வது ஓவரில் ரஹ்மத் ஷாவின் கையில் அடிபட்டது. இதில் அவருக்கு லேசான வலி ஏற்பட்டது.

14:37 October 11

India Vs Afghanistan : ரஹ்மத் ஷா!

ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் சர்தான் அவுட்டான நிலையில், ரஹ்மத் ஷா களமிறங்கி உள்ளார்.

14:35 October 11

India Vs Afghanistan : இப்ராஹிம் சர்தான் 22 ரன்!

ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர் இப்ராஹிம் சர்தான் 28 பந்துகளில் 4 பவுண்டரி அடித்து 22 ரன்கள் குவித்து இருந்த நிலையில், விக்கெட் கீப்பர் கே.எல். ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

14:33 October 11

India Vs Afghanistan : விக்கெட்!

ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சர்தான் அவுட்டானார். பும்ரான் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து இப்ராஹிம் ஆட்டமிழந்தார்.

14:30 October 11

India Vs Afghanistan : 6 ஓவர்களில் 28 ரன்!

ஆப்கானிஸ்தான் அணி 6 ஓவர்கள் முடிவில் 28 ரன்கள் குவித்து உள்ளது. தொடக்க வீரர்கள் இப்ராஹிம் சத்ரான் 22 ரன்களும், ரஹமன்னுல்லா குர்பாசு 9 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

14:21 October 11

India Vs Afghanistan : ஆப்கான் 18 ரன்!

4 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 18 ரன்கள் குவித்து உள்ளது. மூன்று பவுண்டரிகள் அடித்து இப்ராஹிம் சத்ரான் 16 ரன்னும், ரஹமன்னுல்லா குர்பாசு 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

14:15 October 11

India Vs Afghanistan : புது சாதனையை நெருங்கும் விராட் கோலி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பீல்டிங் செய்து வரும் இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி 3 கேட்ச்களை மட்டும் பிடித்தால் உலக கோப்பை கிரிக்கெட்டில் 150 கேட்ச்களை பிடித்த வீரர் என்ற மைல்கல்லை அடைவார்.

14:12 October 11

India Vs Afghanistan : சாதனையை நோக்கி ரோகித் சர்மா!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 22 ரன்கள் குவித்தால் உலக கோப்பை கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்,.

14:10 October 11

India Vs Afghanistan : பவுண்டரி!

2வது ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 6 ரன்கள் சேர்த்து உள்ளது. முகமது சீராஜ் வீசிய ஓவரில் ஆப்கான் தொடடக்க வீரர் இப்ராஹிம் சத்ரான் பவுண்டரி அடித்தார்.

14:05 October 11

India Vs Afghanistan : 1 ரன்!

முதல் ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 1 ரன் குவித்து உள்ளது. அதுவும் ஓவரின் 3வது பந்தை ஜஸ்பிரித் பும்ரா வைடு வீசினார்.

14:01 October 11

India Vs Afghanistan : போட்டி தொடங்கியது!

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டம் தொடங்கியது. ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் களமிறங்கி உள்ளனர்.

13:49 October 11

India Vs Afghanistan : வீரர்கள் பட்டியல்!

இந்தியா : ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர்.

ஆப்கானின்ஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபாரூக்கி, அப்துல் ரஹ்மான் அல்குர்ஹில், இப்ராஹிம் சத்ரான் ஹசன், நூர் அகமது.

13:32 October 11

India Vs Afghanistan : டாஸ் வென்று ஆப்கான் அணி பேட்டிங் தேர்வு!

டெல்லி : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (அக். 11) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளார்.

Last Updated :Oct 11, 2023, 9:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.