ETV Bharat / sports

மீண்டும் வில்லியம்சனை வெளியேற்றத் தயாராகும் கோலி; இறுதிக்கு முன்னேறுவது யார்?

author img

By

Published : Jul 9, 2019, 9:24 AM IST

மான்செஸ்டர்

மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு ட்ரஃபோர்ட் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ப்ளாக் கேப்ஸ் நியூசிலாந்தை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது.

2008ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை கோலி தலைமையிலான இந்திய அணி வீழ்த்தி வெற்றிபெற்றது. அதே வரலாறு இன்றும் திரும்புமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில் கடைசியாக ஆடிய 8 உலகக்கோப்பைத் தொடர்களில் 7 தொடர்களில் அரையிறுதி வரை முன்னேறியுள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டம் வரை முன்னேறியது.

மான்செஸ்டர்
ராஸ் டெய்லர்

நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லரின் கடைசி உலகக்கோப்பை தொடர் இது என்பதால் கோப்பையுடன் விடை கொடுக்க வேண்டும் என விளையாடி வருகிறது. ஆனால் இதுவரை ஆடிய 8 லீக் போட்டிகளில் மூன்றாவது வீரராக களமிறங்கும் கேப்டன் வில்லியம்சன் 5 போட்டிகளில் 3ஆவது ஓவரிலேயே களமிறங்கியுள்ளார். தொடக்க வீரர்கள் மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முழுக்க முழுக்க வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோரை நம்பியே அந்த அணி உள்ளது. இவர்களும் இந்தியாவின் வேகப்புயல் பும்ராவை எவ்வாறு சமாளிக்கப் போகிறார்கள் என்பது போட்டியின்போது தெரியும்.

அதேபோல், இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா - ராகுல் ஆகியோரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது என ரசிகர்கள் பேசினாலும், இதுவரை அவர் ஆடிய போட்டிகளில் மிஸ் செய்யப்பட்ட கேட்ச்கள் மட்டும் 10க்கும் மேல். எனவே இன்றைய போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களான ஃபெர்குசன், போல்ட் ஆகியோரின் அனல் பறக்கும் பந்துகளில் ரோஹித் தப்பிப்பாரா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஃபெர்குசன்
ஃபெர்குசன்

இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய சாதகம் என்னவென்றால் இதுவரையிலும் கோலியின் நிஜ ஆட்டம் வெளிப்படவில்லை என்பது ஒரு நிம்மதி. பெரிய போட்டிகளில் கோலி ரன் குவிக்க திணறுகிறார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு இன்று பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வரும் பிரச்னை உலகக்கோப்பைத் தொடரிலும் வெளிப்படுகிறது. நான்காவது வீரராக களமிறங்கும் வீரர்கள் ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் பொறுப்பை ஏற்பதில்லை. சரியான நேரத்தில் தவறான ஷாட்களை ஆடி விக்கெட்டை இழக்கிறார்கள். தினேஷ் கார்த்திக்கை நான்காவது வீரராக களமிறக்க மாட்டேன் என கோலி ஏன் பிடிவாதமாய் இருக்கிறார் என்பது தெரியவில்லை.

நான்காவது வீரர் சரியாக ஆடாததால் அடுத்து களமிறங்கும் தோனிக்கு பொறுப்பு அதிகமாவதால் தோனியின் ஆட்டம் பாதிக்கப்படுகிறது. மற்றொரு மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால், ஹர்திக் பாண்டியா. ஏனென்றால் இவரது பந்துவீச்சு சில நேரங்களில் எடுபட்டாலும், பேட்டிங்கில் 1,2 ரன்கள் எடுக்க கஷ்டப்படுகிறார். அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அடித்து அது தடுக்கப்படும் போது மட்டுமே 1, 2 ரன்கள் எடுக்கிறார். அந்த பவுண்டரிகள் குறையும்போது விக்கெட்டை தானாக முன்வந்து வழங்கிவிடுகிறார். இதனாலும் தோனிக்கு கூடுதல் பொறுப்பு ஏற்படுகிறது. பந்துவீச்சில் பும்ராவை பற்றி சொல்லவே தேவையில்லை. ஷமியைப் பொறுத்தவரையில் ரன்கள் விட்டுக்கொடுப்பதில் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்.

விராட் கோலி
ஹர்திக் பாண்டியா

அதேபோல், இன்றையப் போட்டியில் ஜாதவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்க வேண்டும். ஆனால், கடைசி நேரம் வரை இந்திய அணியில் யார் ஆடுவார்கள் என்பது விராட் கோலியின் மூளைக்கு மட்டுமே வெளிச்சம். அணித் தேர்வில் இந்திய அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்துதான் இந்திய அணியின் வெற்றி அமையும்.

விராட் கோலி
விராட் கோலி

சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதவுள்ளதால் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Intro:Body:

Nz vs IND match preview


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.