ETV Bharat / sports

‘பாகிஸ்தானில் பாதுகாப்பாக உணர்கிறோம்’ - பாப் டூ பிளஸிஸ்

author img

By

Published : Jan 22, 2021, 11:42 AM IST

SA players feel 'very safe' - Du Plessis ahead of his first Test on Pakistan soil
SA players feel 'very safe' - Du Plessis ahead of his first Test on Pakistan soil

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் பாதுகாப்பாக உணர்வதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் பாப் டூ பிளஸிஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, இரண்டு டெஸ்ட், மூன்று டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 26ஆம் தேதி கராச்சியில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்காக இரு நாட்டு வீரகளும் கடுமையான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போட்டியின் மூலம் பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் 14 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானின் நாங்கள் பாதுகாப்புடன் உணர்வதாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் பாப் டூ பிளஸிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் "கடைசியாக நாங்கள் 13 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன் என்று நினைக்கிறேன். ஆனால் டெஸ்ட்டில் இதுவரை நான் இங்கு விளையாடியது இல்லை. அதனால் இத்தொடருக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அப்போது மைதானத்தின் பரப்பு, தட்டையாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது. ஆனால் தற்போது மைதானத்தின் தன்மை எப்படியுள்ளது என்பதை நாங்கள் அறிய வேண்டும்.

‘பாகிஸ்தானில் பாதுகாப்பாக உணர்கிறோம்’

பாகிஸ்தான் வீரர்கள் கடந்த 13, 14 ஆண்டுகளாக தங்களது சொந்த மண்ணில் விளையாடாமல் இருந்து வருகின்றனர். அதனால் மைதானத்தின் தற்போதைய தன்மை என்ன என்பது அவர்களுக்கு கேள்விக்குறியான ஒன்றே. எனவே இப்போட்டியை எதிர்நோக்கி அவர்களும், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

மேலும் தற்போது நாங்கள் பாகிஸ்தானில் உள்ளோம். இங்கு நாங்காள் பாதுகாப்பாக உணர்கிறோம். இருப்பினும் கரோனா சூழல் என்பதால் எங்களால் எங்கேயும் செல்லமுடியவில்லை. ஆனால் இனி வருங்காலங்களில் மற்ற அணிகளும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்" என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘திட்டமிட்டபடி ஒலிம்பிக் நடைபெறும்’ - தாமஸ் பேச்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.