ETV Bharat / sports

#ASHES: இங்கிலாந்தை எப்படி சமாளிக்கப் போகிறது ஆஸ்திரேலியா...!

author img

By

Published : Sep 15, 2019, 7:51 AM IST

ashes test

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலையுடன் பேட்டிங் செய்துவருகிறது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் என்பது மிகவும் பிரபலம் வாய்ந்த தொடராகும். இந்தாண்டுக்கான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் பங்கேற்றுவருகின்றன. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளதோடு கோப்பையையும் தக்கவைத்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

எனினும் ஸ்டீவ் ஸ்மித் 80 ரன்கள் குவித்து வழக்கம்போல் இங்கிலாந்து அணிக்கு தலைவலி ஏற்படுத்தினார். அவருக்கு உறுதுணையாக மார்னஸ் லாபுக்ஸாக்னே 48 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளையும், சாம் குர்ரான் 3, வோக்ஸ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். பின்னர் 69 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கிய பின் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரோரி பர்ன்ஸ் 20 எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ஜோ ரூட் 21 ரன்னில் வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ டென்லி - பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்து இங்கிலாந்த அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.

ashes test
ஜோ டென்லி - பென் ஸ்டோக்ஸ்

அந்த இணை மூன்றாவது விக்கெட்டிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தபோது லயன் பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் போல்டானார். அவரைத் தொடர்ந்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டென்லி 94 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் வந்த பெய்ர்ஸ்டோவ் 14, சாம் குர்ரான் 17, வோக்ஸ் 6 என அடுத்தடுத்து வெளியேறினர். இருப்பினும் அதிரடியாக ஆடிய பட்லர் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதனால் இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்களை எடுத்து 382 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. எனவே இன்றைய ஆட்டத்தில் 400 ரன்கள் முன்னிலை பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இன்னும் இரண்டு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள காரணத்தால் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவதற்கான பல முயற்சிகளை மேற்கொள்ளும்.

ashes test
ஸ்டீவ் ஸ்மித்

அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை பெரிதாக சொல்லும்படியாக இல்லை என்பதாலும் இங்கிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆஸ்திரேலிய அணி பெரும்பாலும் ஸ்டீவ் ஸ்மித்தையே சார்ந்து இருக்கிறது. அவர் தவிர்த்து வார்னர், ஹாரிஸ், வேட், டிம் பெய்ன் உள்ளிட்ட அனைவரும் பேட்டிங்கில் கைக்கொடுத்தால் நிச்சயம் இந்தப் போட்டியில் வெற்றிபெறலாம்.

இங்கிலாந்து அணி இம்முறை ஆஷஸ் கோப்பையை கைப்பற்ற தவறியதால், இப்போட்டியில் வெற்றிபெற்று இந்தத் தொடரை 2-2 என சமநிலையில் முடிக்கவும், ஆஸ்திரேலிய அணி கோப்பையை தக்க வைத்துள்ளதால் பெரும்பாலும் இப்போட்டியில் தோல்வியை தவிர்க்கவே முயற்சி செய்யும்.

எனவே இன்று நடைபெறும் நான்காவது நாள் ஆட்டத்தை பொறுத்தே இந்தத் தொடரின் முடிவு இருக்கும். பலம்வாய்ந்த இங்கிலாந்து பந்துவீச்சை இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Intro:Body:

dummy for education pending news


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.