ETV Bharat / sports

உளவியல் பிரச்னையிலிருந்து மீண்ட ஆஸி. வீரர்! - பிக் பேஷுக்கு என்ட்ரீ!

author img

By

Published : Dec 13, 2019, 7:15 PM IST

Maxwell set for return
Maxwell set for return

மெல்போர்ன்: உளவியல் பிரச்னை காரணமாக கிரிக்கெட்டிலிருந்து விடுப்பு எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் தற்போது பிக் பேஷ் லீக் டி20 தொடருக்கு என்ட்ரீ கொடுக்கவுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராகத் திகழ்ந்துவருபவர் கிளென் மேக்ஸ்வெல். இவர் கடந்த மாதம் தனது உளவியல் பிரச்னையைக் காரணம் காட்டி சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுப்பதாக அறிவித்தார். இதனால் அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றனர்.

இந்நிலையில் மேக்ஸ்வெல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கு வகையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்தாண்டுக்கான பிக் பேஷ் லீக் டி20 தொடரின் மெல்போர்ன் ஸ்டார் அணிக்காக விளையாடவுள்ளார். மேலும் அவர் இந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "நான் தற்போது எடுத்திருந்த ஓய்வின்போது சமையல் செய்வதை தினசரி பணியாகச் செய்துவந்தேன். அதுமட்டுமின்றி நான் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மன உளைச்சலால் மிகவும் அவதிப்பட்டுவந்தேன். தற்போது எடுத்த விடுப்பினால் நான் இப்போது மிகவும் நன்றாக இருப்பதாக உணர்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பிரேசில் கால்பந்து வீரர் அடித்த மோசமான பெனால்டி ஷாட்

Intro:Body:

Maxwell set for return after being 'mentally, physically ruined'


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.