ETV Bharat / sports

ஐபிஎல் 2021: ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கு கரோனா தொற்று

author img

By

Published : Apr 3, 2021, 11:01 PM IST

டெல்லி அணியின் நட்சத்திர வீரர் அக்சர் பட்டேலுக்கு இன்று (ஏப்.3) கரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது.

Axar Patel, அக்சர் பட்டேல், ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேல்
ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கு கரோனா தொற்று

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான ஆட்டத்திற்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அணி நிர்வாகம், "துரதிருஷ்டவசமாக, அக்சர் பட்டேல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கோவிட் சார்ந்து அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன," என்று தெரிவித்துள்ளது.

கொல்கத்தா அணி வீரர் நிதீஷ் ராணாவுக்கு அடுத்ததாக அக்சர் கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

"ஒரு வீரர் கரோனா தொற்றுக்கு உள்ளானால், 10 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அச்சமயத்தில் ​நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். மேலும் எந்தவொரு உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளக்கூடாது.

மருத்துவ குழுவினரின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். தனிமைப்படுத்தலின் போது அறிகுறிகள் மோசமடைந்துவிட்டால், அந்த வீரர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்" என்று பிசிசிஐயின் நடைமுறைகள் (BCCI SOP) கூறுகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் 10 ஊழியர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இனிமையான நினைவுகளை தந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு நன்றி - கேரி கிறிஸ்டன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.