ETV Bharat / sports

சாதி, மத, பேதம் எனக்கில்லை- யுவராஜ் சிங் மன்னிப்பு!

author img

By

Published : Feb 15, 2021, 3:45 PM IST

Updated : Feb 15, 2021, 4:58 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யஷ்வேந்திர சாஹல் மீது சாதி ரீதியிலான விமர்சனம் செய்ததாக யுவராஜ் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சாதி, மதம், இனம், நிறம் குறித்த பேதம் எனக்கில்லை என்று யுவராஜ் சிங் மன்னிப்பு கோரியுள்ளார்.

FIR Yuvraj Singh Hisar district Haryana Yuzvendra Chahal Rohit Sharma யுவராஜ் மீது வழக்குப்பதிவு யுவராஜ் ரோகித் சர்மா யஷ்வேந்திர சாஹல் சாதி ரீதியிலான விமர்சனம்
FIR Yuvraj Singh Hisar district Haryana Yuzvendra Chahal Rohit Sharma யுவராஜ் மீது வழக்குப்பதிவு யுவராஜ் ரோகித் சர்மா யஷ்வேந்திர சாஹல் சாதி ரீதியிலான விமர்சனம்

ஹிசார் (ஹரியானா): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் மீது சாதி ரீதியிலான விமர்சனம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து ஹரியானா மாநிலம் ஹிசார் மாநகர காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் இடக்கை ஆட்டக்காரரான யுவராஜ் சிங், கடந்தாண்டு ஜூன் மாதம் ரோகித் சர்மா உடன் இன்ஸ்ட்ராகிராம் நேரலையில் உரையாடினார். அப்போது சுழற்பந்து வீச்சாளர் யஷ்வேந்திர சாஹல் மீது சாதி ரீதியிலான விமர்சனத்தை முன்வைத்ததாக குற்றஞ்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றஞ்சாட்டின் அடிப்படையில் வழக்குரைஞர் ஒருவர், ஹிசார் மாநகர காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் யுவராஜ் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 (சாதி, மத, இன பாகுபாடு), 153A (சாதி, மத, இன பாகுபாட்டின் அடிப்படையில் இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை உருவாக்குதல்), 295 (இன, மத உணர்வுகளை காயப்படுத்துதல்), 505 (அவமதிப்பு) மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட உரையாடல் குறித்து சர்ச்சை எழுந்ததும், தனது செயலுக்கு யுவராஜ் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், “நான் அனைத்து இந்தியர்களையும் நேசிக்கிறேன். அனைவரின் உணர்வுகளையும் மதிக்கிறேன். சாதி, மதம், இனம், நிறம் குறித்த பேதம் எனக்கில்லை. மக்களின் நலனுக்காக என் வாழ்க்கையை தொடர்ந்து அர்ப்பணிக்க விரும்புகிறேன். எனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டையும், நாட்டு மக்களையும் நேசிக்கிறேன். என் அன்பு உங்களுக்கானது” எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு யுவராஜ் சிங், கடந்தாண்டு ஜூன் 5ஆம் தேதி தெரிவித்த வருத்தம் ஆகும். இந்நிலையில் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தவறான தீர்ப்பால் வெளியேறிய யுவராஜ் சிங்!

Last Updated : Feb 15, 2021, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.