ETV Bharat / sports

கில்கிறிஸ்ட்டின் சாதனையை உடைத்த டி காக்

author img

By

Published : Jan 27, 2020, 12:01 PM IST

De kock
De kock

தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக், டெஸ்ட் போட்டிகளில் மிக வேகமாக 200 பேரை ஆட்டமிழக்கச் செய்த நபர் என்ற கில்கிறிஸ்ட்டின் சாதனையை முறியடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் இறுதிப் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்சின்போது தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் நார்ட்ஜின் பந்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஒலி போப் பேட்டில் பட்டு எகிறிய பந்து விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக்கின் கையில் சிக்கியது. இதன்மூலம் டி காக், ஒரு வீரரை 200ஆவது முறையாக ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனைப் பட்டியலில் இணைந்தார். மேலும் இச்சாதனையை மிக வேகமாகப் புரியும் வீரர் என்ற பெருமையையும் அவர் அடைந்தார்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் ஆடம் கில்கிறிஸ்ட் 47ஆவது போட்டியில் இந்தச் சாதனையை படைத்திருந்தார். ஆனால் குவிண்டன் டி காக் தனது 45ஆவது போட்டியிலேயே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிகமுறை விக்கெட் கீப்பிங்கில் ஆட்டமிழக்கச் செய்த நபர் என்ற பட்டியலில் மார்க் பவுச்சருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

நடந்துவரும் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் மூன்று, இரண்டாவது இன்னிங்சில் நான்கு என மொத்தமாக ஏழு கேட்சுகளைப் பிடித்த குவிண்டன் டி காக் இதுவரை 202 முறை (191 கேட்சுகள், 11 ஸ்டெம்பிங்) பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

de-kock
டி காக்

தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர், 147 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 555 முறை (532 கேட்சுகள், 23 ஸ்டெம்பிங்) பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்து இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் 96 போட்டிகளில் 416 முறை (379 கேட்ச்கள், 37 ஸ்டெம்பிங்) இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும் இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 90 போட்டிகளில் 294 முறை (256 கேட்ச்கள், 38 ஸ்டெம்பிங்) ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் மரணமடைந்த கூடைப்பந்து நட்சத்திரம்!

Intro:Body:

De kock surpassed gilly's dismissal record as keeper 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.