ETV Bharat / sports

கரோனா வைரஸ் பாதிப்பு டி20 உலகக்கோப்பைக்கு கிடையாது - ஐசிசி

author img

By

Published : Mar 27, 2020, 10:20 PM IST

COVID-19: 'We are planning for ICC World T20 to go ahead'
COVID-19: 'We are planning for ICC World T20 to go ahead'

கரோனா வைரஸால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் திட்டமிட்டப்படி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தினால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரும் மார்ச் 29ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழலில் இந்தத் தொடர் நடைபெறுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனால், ஆஸ்திரேலியாவில் ஆக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஏதேனும் பாதிப்பு நேரிடுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஐசிசி, திட்டமிட்டபடி இந்தத் தொடர் நடைபெறும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஜூலை மாதம் நடைபெறயிருந்த மிகப் பெரிய விளையாட்டுப் போட்டியாக கருதப்படும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியும் அடுத்தாண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனால், டி20 உலக்கோப்பை தொடர் நடைபெறுமா என்பது தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இது குறித்து ஐசிசி உறுப்பினர்கள் தொலைதொடர்பு வாயிலாக ஆலோசனை நடத்தியது. அதில், தற்போதைய கள நிலவரத்தை பரீசிலித்துவருவதால் ஏற்கனவே திட்டமிட்ட படி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடத்த நாங்கள் தயாராகிவருகிறோம் என்ற ஐசிசியின் நம்பகத்துக்குரிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: வாய்ப்புகள் கிடைக்காது நாம் தான் உருவாக்க வேண்டும் - 26 ஆண்டுகளுக்கு முன் சச்சின் செய்த மேஜிக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.