ETV Bharat / sports

'கோலியைக் கட்டுப்படுத்தியதே எங்களுக்கு உதவியது' - போல்ட்

author img

By

Published : Feb 23, 2020, 7:03 PM IST

வெலிங்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் கோலியை கட்டுப்படுத்தியதே எங்களுக்கு உதவியது என நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் போல்ட் தெரிவித்துள்ளார்.

controlling-kohlis-run-rate-helped-boult
controlling-kohlis-run-rate-helped-boult

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நிறைவடைந்தது. இதில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களுடன் ஆட்டத்தை நிறைவு செய்தது.

இந்திய அணி சார்பாக ரஹானே 25 ரன்களுடனும், விகாரி 15 ரன்களுடனும் நாளைய ஆட்டத்தை தொடரவுள்ளனர். நியூசிலாந்து அணி தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட் மூன்று விக்கெட்டுகளையும், டிம் சவுதி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில், ஆட்ட முடிவுக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த போல்ட், விராட் கோலியின் 'ஸ்டிரைக் ரேட்டை' கட்டுப்படுத்தியதாலேயே எங்களால் இந்திய அணியை சமாளிக்க முடிந்தது. ஏனெனில் அவரை கட்டுபடுத்தாமல் இருந்திருந்தால், பவுண்டரிகளை விளாசித் தள்ளியிருப்பார். அவரின் பலவீனமான 'ஷாட்பிட்ச்' பவுன்சர் யுக்தியை கையாண்டதன் மூலம் அவரை எங்களால் கட்டுபடுத்த முடிந்தது என தெரிவித்தார்.

கோலியின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் போல்ட்
கோலியின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் போல்ட்

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதல் இன்னிங்ஸில் இரண்டு ரன்களிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 19 ரன்களிலும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத் திரும்பிய அதிரடி படை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.