ETV Bharat / sports

பிபிஎல்: மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் ஆட்டம் மழையால் ரத்து!

author img

By

Published : Dec 16, 2020, 9:18 PM IST

BBL: Perth Scorchers vs Melbourne Stars
BBL: Perth Scorchers vs Melbourne Stars

பிபிஎல் தொடரில் இன்று (டிசம்பர் 16) நடைபெற்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக்கின் 10ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதையடுத்து களமிறங்கிய பெர்த் அணியின் தொடக்க வீரர் ஜோஷ் இங்ஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த காலின் முன்ரோ - ஜோ கிளர்க் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

இதில் சிறப்பாக விளையாடி வந்த முன்ரோ அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 49 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து 34 ரன்களை எடுத்திருந்த ஜோ கிளர்க்கும் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர்.

இதனால் 17 ஓவர்கள் முடிவில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் முதல் இன்னிங்ஸ் ஆட்டம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் டக்வெர்த் லூவிஸ் முறைப்படி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு ஆறு ஓவர்களில் 76 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் அணிக்கு தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் - ஃபிளிட்சர் இணை களமிறங்கியது. இதில் ஸ்டோய்னிஸ் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ‘சீசனின் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறோம்’ - அர்ஷ்தீப் சிங்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.