ETV Bharat / sports

"ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" - சென்னை மக்களுக்கு டேவிட் வார்னர் வேண்டுகோள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 9:52 PM IST

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

Australian Cricketer David Warner Instagram : மிக்ஜாம் புயலால் சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டு உள்ளார்.

ஹைதராபாத்: மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால் சென்னை பெருநகரமே தண்ணீரால் தத்தளித்து வருகிறது. இந்த வெள்ளத்தால் பல வாகனங்கள் சேதமடைந்தன. மேலும், ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

தற்போது புயல் கரையை கடைந்து உள்ள நிலையில், கனமழை ஓய்ந்து காணப்படுகிறது. மாநகரில் ஒரு சில இடங்களில் தேங்கிய மழை நீர் வடிந்து வருகிறது. இதனால் சென்னை நகரம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில், புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "சென்னையின் பல இடங்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களை பற்றிதான் எனது எண்ணங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் பாதுக்காப்பாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் உயரமான இடங்களில் பாதுகாப்பாக இருங்கள்.

நீங்கள் உதவ கூடிய நிலையில் இருந்தால், நிவாரண முயற்சிகளிலோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவிகளை செய்ய பரிசீலிக்கவும். மேலும், நம்மால் முடிந்தவரை ஆதரவளிக்க ஓன்றுபடுவோம்" என்று பதிவிட்டு உள்ளார். முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு ஆதரவாக தமிழில் பதிவிட்டு இருந்தார்.

ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த புயல் #CycloneMichaung பாதிப்புகளை கொடுத்தாலும் மனவுறுதியையும், ஒற்றுமையையும் வெளிக் காட்ட வாய்ப்பையும் சேர்த்தே கொடுக்குது. சென்னை மக்களே உங்க சக்தியே தலைக்கு மேல வெள்ளம் போனாலும் தைரியமா ஒண்ணுக்குள்ள ஒண்ணா சேர்ந்து நின்னு ஜெயிக்கிறது தான். தைரியமா இருங்க" என்று பதிவுட்டு உள்ளார்.

  • இந்த புயல் #CycloneMichaung பாதிப்புகளை கொடுத்தாலும் மனவுறுதியையும், ஒற்றுமையையும் வெளிக் காட்ட வாய்ப்பையும் சேர்த்தே கொடுக்குது.சென்னை மக்களே உங்க சக்தியே தலைக்கு மேல வெள்ளம் போனாலும் தைரியமா ஒண்ணுக்குள்ள ஒண்ணா சேர்ந்து நின்னு ஜெயிக்கிறது தான். தைரியமா இருங்க #ChennaiFloods

    — Harbhajan Turbanator (@harbhajan_singh) December 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: அஷ்வினின் சாதனையை சமன் செய்த ரவி பிஷ்னோய்! என்ன அது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.