ETV Bharat / sports

Ashes Test: இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆல் அவுட்!

author img

By

Published : Jul 28, 2023, 10:31 AM IST

ஆஷஸ் தொடர் 2023
ashes test 2023

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 283 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வைத்து நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 23ஆம் தேதி நடந்து முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 27ஆம் தேதி) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கேமரூன் கிரீன் பதிலாக டாட் மர்பி சேர்க்கப்பட்டு இருந்தார்.

இதையடுத்து, பேட் செய்த இங்கிலாந்து அணி 62 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், பென் டக்கெட் 3 பவுண்டரிகளுடன் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜாக் கிராலி 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களிலும், ஜோ ரூட் 5 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். அதன் பின் வந்த ஹாரி புரூக்குடன் சேர்ந்து ரன்கள் சேர்த்த மொயின் அலி 34 ரன்கள் எடுத்து மார்பியிடம் போல்ட் ஆனார்.

தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் 3 ரன்களிலும், பேர்ஸ்டோவ் 4 ரன்களிலும் வெளியேறினர். அதிகபட்சமாக புரூக் 11 பவுண்டரிகள் 2 சிக்சர் உள்பட 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ் 36 ரன்களும், மார்க் வுட் 28 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். முதல் இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி 54.4 ஓவர்களில் 283 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்கள் சாய்த்தார். ஹேசில்வுட், மார்பி 2 விக்கெட்களும், கம்மின்ஸ் மற்றும் மார்ஸ் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் சேர்த்துள்ளது. கவாஜா 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களும், லபுசன் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: IND Vs WI: முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.