ETV Bharat / sports

அபுதாபி டி10 தொடர் கோலாகல தொடக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 11:03 PM IST

Abu Dhabi T10 series
Abu Dhabi T10 series

கிரிக்கெட் விளையாட்டி வேகமான வடிவான அபுதாபி டி10 தொடர் நாளை தொடங்குகிறது.

அபுதாபி: கிரிக்கெட் விளையாட்டில் வேகமான வடிவமான அபுதாபி டி10 தொடர் நாளை (நவம்பர் 28) தொடங்கிறது. இந்த தொடரானது வரும் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்களா டைகர்ஸ், சென்னை பிரேவர்ஸ், டெல்லி புல்ஸ், டெக்கான் கிளாடியேட்டர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடரில் ஒவ்வொறு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் முதல் நான்கு இடத்திற்கு முன்னேறும் அணிகள் அரையிறுதியில் மோதிக்கொள்ளும். இதற்கிடையில் ஐபிஎல் தொடர் போலவே இந்த தொடரிலும், அணியின் வீரர்களை தக்கவைத்து கொள்வதும், விடுவிப்பதுமான டிரேடிங் முறை நடைபெற்றது.

அதில் நடப்பு சாம்பியனான டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனான நிக்கோலஸ் பூரனை அந்த அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேபோல், கடந்த சீசனில் ரன்னர் அப்பான நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி மற்றும் மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணியும் முறையே கீரன் பொல்லார்ட் மற்றும் மொயீன் அலியை தங்களது கேப்டனாக இந்த ஆண்டும் தொடர்கிறது.

அதேபோல் சிக்கந்தர் ராசா சென்னை பிரேவர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை சரித் அசலங்காவிடம் ஒப்படைத்ததால், மற்ற அணிகளும் தங்களது கேப்டன்களை மாற்றிக்கொண்டது. ஏஞ்சலோ மேத்யூஸ் நார்த்தன் வாரியர்ஸ் அணிக்கு கேப்டனாகவும், ரோவ்மன் போவல் டெல்லி பில்ஸ் அணிக்கு கேப்டனாகவும் பொறுப்பேற்றுள்ளன்ர்.

நாளைய முதல் போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸும், நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸும் மோதுகின்றன. அதனையடுத்து 2வது போட்டியாக வடக்கு வாரியர்ஸ், மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மியை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க: "டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும்" - முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.