ETV Bharat / sitara

TRPயில் விஜய்யின் 'பிகில்' படத்தை பின்னுக்குத் தள்ளிய 'விஸ்வாசம்' - உற்சாகத்தில் தல ரசிகர்கள்

author img

By

Published : Jan 24, 2020, 12:05 PM IST

TRP-யில் விஜயின் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம்!
TRP-யில் விஜயின் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம்!

பொங்கல் பண்டிகைக்கு தொலைக்காட்சியில் வெளியான 'விஸ்வாசம்' படம் TRPயில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு பண்டிகை வந்துவிட்டால் தொலைக்காட்சிகளில் புதுப் படங்கள் ஒளிபரப்புவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபல தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக புதிய படங்கள் ஒளிபரப்பாகின. அந்த வகையில் பேட்ட, விஸ்வாசம், பிகில், சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. தொடர்ந்து புதுப் படங்கள் என்பதால், ரசிகர்கள் எந்தப் படத்தை பார்ப்பது, எதை விடுவது என்று தெரியாமல் குழம்பி இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி பிரபல தொலைக்காட்சியில் விஸ்வாசம் திரைப்படம் ஒளிபரப்பானது. குடும்ப சென்டிமென்ட்டை அடிப்படியாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே திரையரங்கத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யவுள்ளது என்று அறிவிக்கப்பட்டவுடனே, கண்டிப்பாக TRPயில் முதல் இடத்தை பிடிக்கும் என்றும் அஜித் ரசிகர்கள் உறுதியாக தெரிவித்தனர்.

அவர்கள் சொன்னது தற்போது உண்மையில், உறுதியானது. ஆம்... அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம், தொலைக்காட்சியில் அதிகமானோர்களால் பார்க்கப்பட்ட தென்னிந்திய படம் என்ற சாதனையைச் செய்துள்ளது.

இதற்கு முன்னதாக முதல் இடத்தில், சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படம் இருந்தது. இந்தச் சாதனையை 'விஸ்வாசம்' படம் முறியடித்துள்ளதை, அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதே போன்று அட்லீ இயக்கத்தில் விஜய், நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படமும் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சொல்லப்பட்ட இப்படம், விஸ்வாசம் படத்தை விட TRPயில் பின்தங்கியே உள்ளது. இதையடுத்து அஜித் ரசிகர்கள், #KingOfTRPThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர்.

மேலும் TRP ரேட்டிங்கில் சாதனைப் படைத்த படங்களில் முதல் இடத்தில் விஸ்வாசம் திரைப்படமும், இரண்டாவது இடத்தில் பிச்சைக்காரனும், மூன்றாவது பாகுபலி திரைப்படமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மைனஸ் 6 டிகிரி குளிரில் அதர்வா - 'பிரேமம்' மேரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.